Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, January 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»சுற்றுலா, பயண மேலாண்மை படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் – ஒரு பார்வை
    கல்வி

    சுற்றுலா, பயண மேலாண்மை படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் – ஒரு பார்வை

    adminBy adminMay 16, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சுற்றுலா, பயண மேலாண்மை படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் – ஒரு பார்வை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பிளஸ் டூ முடித்த மாணவர்கள், இளநிலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட் ஊட்டி அரசு கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

    உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும், 10ல் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கும் பிரிவாகவும் திகழ்கிறது சுற்றுலாத் துறை. இந்தத் துறைத் தொடர்பான சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகி வருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது.

    சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு, வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து வருகின்றன. ஆனாலும், தமிழகத்தில் சுற்றுலா படிப்பைப் பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் அவ்வளவாக இல்லை என்பதே நிதர்சனம்.

    பிளஸ் டூ முடித்த மாணவர்கள், இளநிலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பி.ஏ.டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட், பி.பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட், பி.காம். டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட் எனப் பல பெயர்களில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரி உட்படப் பல அரசு, தனியார் கல்லூரிகளில் பி.ஏ.டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட் என்ற மூன்று ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது.

    ஊட்டி அரசு கல்லூரி சுற்றுலாத் துறை பேராசிரியர்கள் கூறியது: பிளஸ் டூ வகுப்பில் எந்த பிரிவில் படித்த மாணவர்களும் இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படிக்கலாம். தகவல் தொடர்புத் திறன், ஆளுமை மேம்பாடு, பயண நிறுவனம் மேலாண்மை, உலகச் சுற்றுலாத் தலங்களைப் பற்றிய அறிவு , சுற்றுலா தொகுப்பு வடிவமைப்பு, சந்தைப் படுத்தல் மேலாண்மை, சுற்றுலா பொருளாதாரம், விருந்தோம்பல் மேலாண்மை, நிகழ்வு மேலாண்மை, விமான மற்றும் விமான நிலைய மேலாண்மை ஆகியவை சுற்றுலா பாடத் திட்டத்தில் உள்ள மிக முக்கியமான பாடங்கள். இந்தப் பாடப் பிரிவில் கற்றுத் தேர்ந்து சிறந்த அறிவும் ஆங்கில மொழிப் புலமையும் பேச்சுத் திறனும் வளர்த்துக்கொண்டால் சுற்றுலாத் துறையில் பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.

    ஏதாவது ஓர் இளைநிலை பட்டம் பெற்ற பிறகும் கூட, முதுநிலை பட்டமாக சுற்றுலா படிப்புகளைப் படிக்கலாம். MTTM (Master of Tourism & Travel Management), MBA (Tourism), MA (Tourism) எனப் பல பெயர்களில் பல்கலைக் கழகம் சார்ந்து முதுநிலையில் சுற்றுலா படிப்புகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை கல்வி நிறுவனம் (IITTM) குவாலியர், நொய்டா, புவனேஸ்வர், கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் சுற்றுலா சார்ந்த உயர் கல்வியை வழங்குகிறது.

    புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுடெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம், பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், HNB கர்வால் பல்கலைக் கழகம், ஜம்மு மத்தியப் பல்கலைக்கழகம், ஹிமாச்சல் மத்தியப் பல்கலைக் கழகம் ஆகிய மத்தியப் பல்கலைக் கழகங்களில் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன

    தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், கோவை அரசு கலைக் கல்லூரியிலும் சுற்றுலா சார்ந்த முதுநிலை பாடப் பிரிவுகள் வழங்கப்படுகின்றன. புத்தகப் படிப்பைத் தாண்டி செயல் வழி கல்விக்காகச் சுற்றுலா சார்ந்த பாடத் திட்டத்தில் இரண்டு மாத நிறுவனப் பணிப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் படிக்கும்போதே பணிக்குத் தயாராகிவிடுவார்கள்.

    சுற்றுலாத் துறையில் உள்ள ஏராளமான வேலை வாய்ப்புகளுக்கு, அபரிமிதமான மனித வளம் தேவைப் படுகிறது. முதுநிலை சுற்றுலா பயின்ற மாணவர்கள், இந்தத் துறையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களால் மேலாண்மைப் பயிற்சியாளராகப் பணியமர்த்தப்படுகிறார்கள்.

    பயண முகவர், சுற்றுலா ஒருங்கிணைப்பு நிறுவனங்கள், ஆன்லைன் பயண நிறுவனங்கள், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள், விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல், போக்குவரத்து மற்றும் சரக்கு நிறுவனங்கள் எனப் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2,000 பேருக்கு டேட்டா சயின்ஸ் பயிற்சி: சென்னை ஐஐடி சிறப்பு திட்டம்

    December 3, 2025
    கல்வி

    விடுமுறை நாட்களில் தேர்வுப் பணி; மாற்று விடுப்பு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    நாளை முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: தேர்வை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

    December 3, 2025
    கல்வி

    இளம் வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் அறிவுறுத்தல்

    December 3, 2025
    கல்வி

    950 மையங்​களில் தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு: 2.70 லட்சம் பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்பு 

    December 3, 2025
    கல்வி

    பள்ளி வாகனங்கள் மூலம் படிப்பை வசமாக்கிய பழங்குடியினர் நலத்துறை!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டிரம்பின் சமீபத்திய சுகாதார நேர்காணல் ஆஸ்பிரின் அசாதாரண நுகர்வு பற்றிய கவலையைத் தூண்டுகிறது, “என் உடல்நிலை சரியானது, ஏனெனில்” – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டாலியா vs உப்மா: எந்த காலை உணவு உடல் எடையை குறைக்க உதவுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கழிப்பறை மூடியை கழுவுவதற்கு முன் மூடுவதற்கான மறைக்கப்பட்ட காரணம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆரம்ப அறிகுறிகள், தெரிந்து கொள்ள வேண்டிய தடுப்பு குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புத்தாண்டு எடை இழப்பு பெரும்பாலான மக்கள் செய்யும் தவறு பற்றி ஹார்வர்ட் ஆவணம் எச்சரிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.