சென்னை: சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயலி உருவாக்குவது குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு நாளை (நவ.11) முதல் 13-ம் தேதிவரை நடைபெறுகிறது.
இதில் முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பயன்படுத்தும் நோ-கோட், லோ-கோட் ஏஐ கருவிகள், ஏஐ மாதிரிகள் குறித்த பயிற்சி அளிக்கப்படும். அதேபோல் பிரபலமான சாட்ஜிபிடி, ஜெமினி, நோட்புக் எல்.எம்., ஜேப்பியர், கிளைட், ஃபயர்பேஸ், போல்ட் போன்ற ஏஐ தளங்களைக் கொண்டு செயலிகளை உருவாக்க செயல்முறை பயிற்சி, ப்ராம்ட் இன்ஜினியரிங் முறைகள், ஏஐ வலைதளங்கள் மற்றும் செயலிகளை உருவாக்குதல், தொழில்துறை தேவைகளுக்கான ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ளுதல், கல்வி, சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பயன்பாட்டு மாதிரிகளை உருவாக்குதல்.

