மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவும் வகையில், கோவையைச் சேர்ந்த மாணவி ரிதன்யா, ‘வைப்ரன்ஸ் ஹப்’ என்ற புதுமையான இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா (17). தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக ‘வைப்ரன்ஸ் ஹப்’ (www.vibrancehub.org) என்ற இணைய தளம் மற்றும் மொபைல் ஆப் உருவாக்கியுள்ளார். இந்த தளமானது, மாணவர்கள் திட்ட அடிப்படையிலான கற்றல் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவுகிறது.

