சென்னை: கலை பண்பாட்டுத்துறையின் கீழ் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு வண்ணக்கலை, சிற்பக்கலை, விஷுவல்கம் யூனிகேஷன் மற்றும் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் 4 ஆண்டு கால பிஎஃப்ஏ படிப்புகளும், 2 ஆண்டு கால எம்எஃப்ஏ படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் ஒருங்கிணைந்த டிசைன், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய இரு பாடப் பிரிவுகளில் 4 ஆண்டு கால பிஎஃப்ஏ படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சேருவதற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்புகளில் சேர்ந்து பயில விரும்புவோர் கலை பண்பாட்டுத்துறையின் இணைய தளத்தை (www.artandculture. tn.gov.in) பயன்படுத்தி ஆக. 9-ம் தேதி மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.