சென்னை: தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் இடைநிற்றலின்றி பயில ஊக்கத்தொகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலர்களை தொடர்பு அலுவலர்களாக நியமனம் செய்து, விடுபட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் வரும் 10-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, எமிஸ் தளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் 13,304 மாணவிகளுக்கு ஆதார் விவரம், 60,349 மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு எண், 45,498 மாணவிகளுக்கு ஆண்டு வருமானம் விவரங்களை எமிஸ் தளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும்.