கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குருப்-2 மெயின் தேர்வின் முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
குருப்-2 பணிகளுக்கான மெயின் தேர்வு, கடந்த பிப்ரவரி 8 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெற்றது. பவ்வேறு பதவிகளில் 537 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி நடத்திய அத்தேர்வை 5,553 பேர் எழுதினர்.
இந்நிலையில், மெயின் தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று மாலை வெளியிட்டது. தேர்வர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களின் மதிப்பெண், தரவரிசையை தெரிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.
குருப்-2 ஏ சான்றிதழ் சரிபார்ப்பு: இதனிடையே, கடந்த மே 5-ம் தேதி வெளியிடப்பட்ட குருப்-2-ஏ மெயின் தேர்வு முடிவின்படி, கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியலையும் டிஎன்பிஎஸ்சி நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை மே 16 முதல் 25-ம் தேதி வரை தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஒருமுறை பதிவு பிரிவு வாயிலாக பதிவேற்றம் செய்யுமாறு டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.