சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும், திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), ஓராண்டு தொழிற்பிரிவுகளான உற்பத்தி செயல்முறை மற்றும் ஆட்டோமேஷன், இன் பிளாண்ட் லாஜிஸ்டிக்ஸ், இரண்டாண்டு தொழிற்பிரிவான இயந்திரவியல் டெக்னீஷியன் ஆகிய பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் சேர விரும்பும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவைகளுடன் திருவொற்றியூர் ஐடிஐக்கு நேரடியாக சென்று சேர்ந்து கொள்ளலாம். பயிற்சி கட்டணம் கிடையாது. பயிற்சியில் சேர பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. கூடுதல் விவரங்களை 95668 91187, 99403 72875 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.