சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிடுகிறார்.
இதையடுத்து, மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது.