என் பெற்றோரின் கனவு நான் நன்றாகப் படித்து, ஒரு நல்ல வேலையில் அமர்வது. அந்த கனவை நனவாக்க ‘நான் முதல்வன்’ திட்டம் எனக்கு துணையாக உள்ளது. இந்த திட்டம் இல்லையெனில், எனக்கு அந்த திறன் பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்த முடியாது. ஆனால் இன்று, அது கட்டணமில்லாமல் கிடைத்ததால் என் வாழ்க்கை பாதை முழுவதும் மாறிவிட்டது.
என்னைப் போல பெற்றோரை இழந்து வாடும் பல இளைஞர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டம் ஒரு ஒளிக்கதிராக இருக்கிறது. இது நம்மை வெற்றியடைந்த நபர்களாக உருவாக்குகிறது. எதிர்காலத்தில் நானும் ஒரு நல்ல நிலை அடைந்து, என்னைப்போல் துயரத்தில் வாழும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக, ஆதரவாக இருப்பேன். இந்த வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘நான் முதல்வன்’ – எங்களை போன்ற இளைஞர்களின் கனவுகளுக்கு திசை காட்டும் ஒளிவிளக்கு.

