என் பெயர் அர்ச்சனா. நான் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வெள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவள். எனது இளநிலைப் பட்டப்படிப்பை தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயின்றேன்.
நான் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள SCOUT திட்டத்தின் வாயிலாக அயல்நாட்டிற்கு சென்று பணித்திறன் பெறும் அபூர்வ வாய்ப்பு கிடைத்தது. இது என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பமாக அமைந்தது, ஏனெனில் ஒரு கிராமப்புற மாணவியாக எனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது.

