சென்னை: தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் அக். 7 முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: நடப்பு கல்வியாண்டில்(2025-26) 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சார்ந்து 2-ம் பருவத்துக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி அக்டோபர் 7 முதல் 10-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சி நடைபெறும் நாளில் தொடக்க வகுப்புகளில் கல்வி சார்ந்த பணிகள் பாதிக்கப்படக்கூடாது. ஆசிரியர் இல்லை எனில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மாற்று ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.