Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக நாடு முழுவதும் இன்று மதியம் நீட் தேர்வு
    கல்வி

    இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக நாடு முழுவதும் இன்று மதியம் நீட் தேர்வு

    adminBy adminMay 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக நாடு முழுவதும் இன்று மதியம் நீட் தேர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு பங்கேற்கின்றனர்.

    நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் – NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஹால் டிக்கெட்டில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    தேர்வுக்கு ஹால் டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும். வெளிப்படையாக தெரியும் தண்ணீர் பாட்டிலை உள்ளே கொண்டு செல்லலாம். வழக்கம்போல, செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணிய கூடாது. தலை முடியில் ஜடை பின்னல் போடக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றையும், இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும்.

    ஹால் டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது.

    தவறான விடைக்கு நெகட்டிவ் மார்க் இருப்பதால், தேர்வின்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தை அமல்படுத்த உத்தரவு

    July 5, 2025
    கல்வி

    பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு ஆக.1-ல் தமிழகம் முழுவதும் தொடக்கம்

    July 5, 2025
    கல்வி

    ஆர்டிஇ திட்டத்தில் கல்விக் கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் நெருக்கடி – பெற்றோர்கள் தவிப்பு

    July 5, 2025
    கல்வி

    க்யூட் நுழைவு தேர்வுக்கான முடிவுகள் வெளியானது: 2,679 மாணவர்கள் சாதனை

    July 5, 2025
    கல்வி

    மாதம் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் முதுகலை டிப்ளமா படிப்பு

    July 4, 2025
    கல்வி

    க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,679 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை!

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “புத்த மதம், திபெத் மக்களுக்கு சேவையாற்ற 130 வயது வரை வாழ விரும்புகிறேன்” – தலாய் லாமா
    • ஷுப்மன் கில் 162 பந்துகளில் 161 ரன்கள் விளாசல்: இங்கிலாந்து அணிக்கு 536 ரன்கள் இலக்கு
    • அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை
    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஜூலை 15-ல் தொடங்கி வைக்கிறார்
    • இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால் அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிக்க மத்திய அரசு திட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.