சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு சட்டக் கல்லூரிஇணை பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு, நவம்பர் 19 முதல் 24 வரை நடத்தப்பட உள்ளது. தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

