சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப் புக்கு தொடர்ந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் ஜூலை 31 (நேற்று) என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் விண்ணப்பப் பதிவை ஆகஸ்ட் 1 (இன்று) முதல் தொடர்ந்து மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தைப் பயன்படுத்தி தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 31 வரை விண்ணப் பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு சிறப்புப் பிரிவு மாணவர் களுக்கான கலந்தாய்வு ஆக. 11-ம் தேதியும் பொது கலந்தாய்வு ஆக.13-ம் தேதியும் தொடங்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.