Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, March 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»8 கி.மீ. சுற்றளவு ‘நாசம்’ – இஸ்ரேல் மீது ஈரான் வீசும் கிளஸ்டர் குண்டுகளின் வீரியம் என்ன?
    உலகம்

    8 கி.மீ. சுற்றளவு ‘நாசம்’ – இஸ்ரேல் மீது ஈரான் வீசும் கிளஸ்டர் குண்டுகளின் வீரியம் என்ன?

    adminBy adminJune 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    8 கி.மீ. சுற்றளவு ‘நாசம்’ – இஸ்ரேல் மீது ஈரான் வீசும் கிளஸ்டர் குண்டுகளின் வீரியம் என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தெஹ்ரான் / டெல் அவிவ்: இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் இன்று 9-வது நாளாக தொடரும் நிலையில், கிளஸ்டர் குண்டுகளை ஈரான் முதல் முறையாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இது பல குண்டுகளாக சிதறி வெடிக்கும் வகையை சேர்ந்தது என்பதால் பாதிப்பு அதிகளவில் ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது.

    அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்​படுத்​து​வ​தாக கூறி, அந்​நாட்​டின் மீது இஸ்​ரேல் தாக்​குதலை தொடங்​கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரு​கிறது. இரு நாடு​கள் இடையி​லான போர் இன்று 9-வது நாளாக நீடித்​தது. இந்த தாக்​குதல்​களால் இருதரப்​பிலும் அதிக அளவில் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்​பட்​டுள்​ளது. ஈரானில் ராணுவ உயர் அதி​காரி​கள், மூத்த அணு விஞ்​ஞானிகள் உட்பட 224 பேர் உயி​ரிழந்​தனர். இஸ்ரேலில் 25 பேர் உயி​ரிழந்​தனர்.

    இந்​நிலை​யில், இஸ்​ரேலின் மத்​திய பகு​தி​களில் மக்​கள் அதி​கம் வசிக்​கும் இடங்​களை குறி​வைத்து ஈரான் கடந்த 19-ம் தேதி ‘கிளஸ்டர்’ எனப்படும் கொத்து குண்​டு​களை வீசி​ய​தாக, அமெரிக்​கா​வில் உள்ள இஸ்​ரேல் தூதரகம் தெரி​வித்​தது. சுமார் 8 கி.மீ. சுற்​றளவு வரை கடும் சேதத்தை ஏற்​படுத்​தக்​கூடிய கொத்து குண்​டு​களை இஸ்​ரேல் மீது ஈரான் பயன்​படுத்​து​வது இதுவே முதல் முறை.

    ஈரான் வீசிய கொத்து குண்​டு​களால், இஸ்​ரேல் தலைநகர் டெல்​ அ​விவ் உட்பட பல்​வேறு பகு​தி​களில் பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் சரிந்து கிடப்​ப​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இஸ்​ரேலின் துறை​முக நகர​மான ஹைபா மற்​றும் டான் மாவட்​டங்​கள் உட்பட பல பகு​தி​கள் மீது ஈரான் நேற்று சரமாரி​யாக ஏவு​கணை​களை வீசி​யது.

    சைரன் ஒலி எழுப்​பியதும் மக்​கள் பதுங்கு குழிகளி​லும், வணிக வளாகங்​களின் கார் பார்க்​கிங் பகு​தி​களி​லும் சென்று பதுங்​கினர். ஈரான் வீசிய ஏவு​கணை​கள் பல கட்​டிடங்​கள் மீது விழுந்து வெடித்​தன. பீர் சேவா நகரில் உள்ள மைக்​ரோ​சாஃப்ட் அலு​வலக கட்​டிடம் மீது ஈரான் ஏவு​கணை விழுந்து வெடித்​த​தில் பலர் காயம் அடைந்​தனர்.

    கிளஸ்டர் குண்டுகளின் வீரியம் என்ன? – கிளஸ்டர் குண்டு என்பது மற்ற ஏவுகணைபோல ஒரே முறையில் வெடிப்பது அல்ல. இலக்கை நெருங்கியதும், தரையில் இருந்து 7 கி.மீ. உயரத்தில் வெடிக்கும். அப்போது அதில் இருந்து வெளியேறும் ஏராளமான சிறு சிறு குண்டுகள் 8 கி.மீ. சுற்றளவுக்கு சிதறி விழுந்து, ஒவ்வொன்றும் தனித்தனியாக வெடிக்கும். குடியிருப்பு பகுதிகளில் இந்த குண்டு விழும்போது, அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    கிளஸ்டர் குண்டுகள் தரையில் விழுந்து வெடிக்காமல் கிடந்தாலும் ஆபத்துதான். வெடிக்காமல் கிடக்கும் கிளஸ்டர் குண்டுகளை, யாராவது தொட்டாலோ, மிதித்தாலோ கண்ணிவெடி போல பயங்கரமாக வெடிக்கும். எனவே, ‘தரையில் கிடக்கும் சந்தேகத்துக்குரிய பொருட்களை தொட வேண்டாம். அது போன்ற பொருட்களை பார்த்தால், அவசர உதவி எண் ‘100’-க்கு போன் செய்ய வேண்டும் என மக்களுக்கு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்திய வம்சாவளி அதிகாரிகள்: “முழுமையாக இந்தியர்களால் நடத்தப்படுகிறதா?”: கனேடிய தலைவர் அரசாங்க நிறுவனத்தில் இந்திய வம்சாவளி உறுப்பினர்களை அழைத்ததற்காக பின்னடைவை எதிர்கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 12, 2026
    உலகம்

    பென்சில்வேனியாவில் ஹெச்-1பி விசா மோசடி, ஹெல்த்கேர் ஊழல் போன்றவற்றில் தண்டனை பெற்ற காஷ் படேலைச் சந்தித்ததைப் பற்றி தற்பெருமை காட்டிய இந்திய வம்சாவளி சகோதரர்கள்; 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    இங்கிலாந்தின் வெம்ப்லியில் உள்ள இந்திய கடைகள், உணவகங்கள் இலக்கு தாக்குதல்களில் நாசமாக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    அன்னா லீ வாட்டர்ஸ் யார்? 19 வயதான பிக்கிள்பால் நட்சத்திரம் அடுத்த மாதம் சர்வதேச அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ‘இந்து விரோதிகளை புண்படுத்த வேண்டாம்’: இந்திய வம்சாவளி பிராண்ட் லட்சுமி சிலையை பேக்கேஜிங்கில் இருந்து அகற்றியது, ஆன்லைனில் பெரும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ஜார்ஜியா பள்ளி சண்டை கொடியதாக மாறியது: மற்றொரு மாணவனுடன் சண்டையிட்டு 12 வயது சிறுமி மரணம்; வீடியோவைப் பார்க்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மலாய்கா அரோரா பிங்க் புடவை: கிருத்திகா கம்ரா–கௌரவ் கபூரின் அந்தரங்க திருமணத்தில் ₹2.79 லட்சம் இளஞ்சிவப்பு நிற புடவையில் தலமாக மாறிய மலாய்கா அரோரா | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹன்சிகா மோத்வானியின் விவாகரத்துக்கு மத்தியில், அவரது முன்னாள் மைத்துனி முஸ்கான் ரகசிய பதிவுகளைப் பகிர்ந்துள்ளார் – என்ன சர்ச்சை? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இஸ்ரோ, மனிதப் பணிகளுக்கான விண்வெளி மருந்தை உருவாக்க எய்ம்ஸ் பங்குதாரர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்திய வம்சாவளி அதிகாரிகள்: “முழுமையாக இந்தியர்களால் நடத்தப்படுகிறதா?”: கனேடிய தலைவர் அரசாங்க நிறுவனத்தில் இந்திய வம்சாவளி உறுப்பினர்களை அழைத்ததற்காக பின்னடைவை எதிர்கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சுயமாக வளரும் ஏறுபவர்கள் தாவரங்கள்: குறைந்த பராமரிப்பு மற்றும் இந்திய வானிலை-ஆதாரம் கொண்ட 6 சுய வளரும் ஏறுபவர்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.