Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, March 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணையை ரத்து செய்ய ட்ரம்ப் தரப்பை நாடும் அதானி
    உலகம்

    லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணையை ரத்து செய்ய ட்ரம்ப் தரப்பை நாடும் அதானி

    adminBy adminMay 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணையை ரத்து செய்ய ட்ரம்ப் தரப்பை நாடும் அதானி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நியூயார்க்: அதானி குழுமம் மீதான ரூ.2,200 கோடி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு புகார் தொடர்பான விசாரணையை ரத்து செய்யக் கோரி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தை அதானி தரப்பு நாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து முன்னணி செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு, அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அதானி தரப்புக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாக அதிகாரிகளை அதானி குழும பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர்கள் ரத்து செய்யக் கோருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை இந்த ஆண்டின் தொடக்கம் முதல் நடந்து வருவதாகவும் தகவல். விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு ட்ரம்ப் அரசின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும், அதனால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதானி தரப்பு கூறியுள்ளதாக தகவல்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஷில்பா சவுத்ரி: இந்திய வம்சாவளி அமெரிக்க ராணுவ வீரர் ஷில்பா சவுத்ரி விவாதத்தை கிளப்புகிறார்: ‘ஈரான் தலைவருக்காக இந்தியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?’ | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஹோலி கொண்டாட்டம் ஹாரோ: யுகே: ஹாரோவில் நடந்த ஹோலி நிகழ்வில் சண்டை மூண்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஹாலிவுட் & அனிமேஷன் மூலம் ஈரான் தாக்குதல்களை வெள்ளை மாளிகை மகிமைப்படுத்துகிறது: ‘ஜஸ்டிஸ் தி அமெரிக்கன் வே’ சீற்றத்தைத் தூண்டுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 6, 2026
    உலகம்

    ‘நாங்கள் சுடப்பட்டபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?’: கண்ணை இழந்த ஈரானிய ஆர்வலர் கமலா ஹாரிஸை அமெரிக்கத் தாக்குதல்களை எதிர்த்ததற்காக அவதூறாகப் பேசுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 6, 2026
    உலகம்

    ‘நான் பாதுகாப்பாக உணரவில்லை’: கனடாவில் குத்திக் கொல்லப்பட்ட செல்வாக்குமிக்க நான்சி கிரேவாலின் பழைய வீடியோ வைரலாகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 6, 2026
    உலகம்

    ஈரானுடன் அமெரிக்கா-இஸ்ரேல் போர்: பல்வேறு வளைகுடா நாடுகள் இங்கிலாந்து மற்றும் கெய்ர் ஸ்டார்மர் மீது ஏன் கோபமாக உள்ளன | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உலகின் ஒரே உண்மையான நீல பழத்தை வளர்க்கும் நீல குவாண்டாங் மரத்தை சந்திக்கவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பகல் சேமிப்பு நேரம் 2026: இந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் கடிகாரங்கள் முன்னோக்கி வருகின்றன; நீண்ட மாலை மற்றும் குறுகிய தூக்கம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நேர்காணலுக்கு முன் மோசமான முடி வெட்டுதல் ₹5.2 கோடி வழக்குக்கு வழிவகுக்கிறது, உச்சநீதிமன்றம் ₹25 லட்சம் வழங்குகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மத்திய கிழக்கு பயண இடையூறுகள்: துபாய் விமான நிலையங்கள் புதுப்பிப்பு: 84 மணி நேரத்தில் 1,140 க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பின்னடைவைக் குறைக்கின்றன; பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டியது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை எவ்வாறு அடையாளம் காண்பது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.