Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, March 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண்
    உலகம்

    ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண்

    adminBy adminOctober 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கீவ்: ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்தியர், உக்ரைன் படைகளிடம் சரணடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    உக்ரைன் ராணுவத்தின் 63-வது படைப்பிரிவு, அதன் டெலிகிராம் சேனலில், குஜராத்தைச் சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இந்தியர் ஒருவரின் வீடியோவை வெளியிட்டது. ஆனால், இதுகுறித்து இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் இல்லை.

    உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதிசெய்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து உக்ரைன் அதிகாரிகளிடமிருந்து எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    22 வயதான மஜோதி சாஹில் முகமது ஹுசைன் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க ரஷ்யா வந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்ததாக தி கீவ் இன்டிபென்டன்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

    முகமது ஹுசைன் அந்த வீடியோவில், “போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் ரஷ்ய சிறையில் எனக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தண்டனையைத் தவிர்க்க ரஷ்ய ராணுவத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் சிறையில் இருக்க விரும்பவில்லை, எனவே சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். ஆனால் நான் அங்கிருந்து வெளியேற விரும்பினேன்.

    16 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு, நான் அக்டோபர் 1-ம் தேதி எனது முதல் போர் பணிக்கு அனுப்பப்பட்டேன். போரில் இருந்த போது சுமார் இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஒரு உக்ரைன் துருப்பினை கண்டேன். நான் உடனடியாக என் துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு, நான் சண்டையிட விரும்பவில்லை என்று சொன்னேன். எனக்கு உதவி தேவை. நான் ரஷ்யாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்று கூறினேன்” என்று அவர் சொன்னார்.

    ரஷ்ய ராணுவத்தில் தற்போது பணியாற்றி வரும் 27 இந்தியர்களை விடுவித்து திருப்பி அனுப்புமாறு ரஷ்யாவிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது. உக்ரைன் போரில் ரஷ்யா சார்பில் சண்டையிடும் போது 12 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் 96 இந்தியர்கள் ரஷ்ய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டனர். மேலும் 16 பேர் காணாமல் போனதாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி நபர் கடன் மோசடியில் 1 மில்லியன் டாலர்களை திருடி, தொற்றுநோய் நிவாரண பணத்துடன் ஃப்ரெஸ்னோவில் நிலத்தை வாங்குகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 25, 2026
    உலகம்

    ‘கேவலமான நடவடிக்கை’: மனித உடல்களை உரமாக மாற்றும் மசோதா ஓக்லஹோமா பிரதிநிதி ஜிம் ஷாவால் கடும் கண்டனத்தை எதிர்கொள்கிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 25, 2026
    உலகம்

    ‘சண்டையை விரும்பினேன்’: DHS தலைவர் Markwayne Mullin இன் கடந்தகால அதிர்ச்சிகரமான வீடியோக்கள் பின்னடைவைத் தூண்டியது, நெட்டிசன்கள் அவரை ‘தகுதியற்றவர்’ என்று அழைக்கின்றனர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 25, 2026
    உலகம்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதுபானக் கடை உரிமையாளர் குல்விர் பிரார் மீது அமெரிக்காவில் 39 குற்றச்சாட்டுகள்; வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு உடலுறவு கொள்ள போதைப்பொருள் வழங்கப்பட்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 24, 2026
    உலகம்

    ‘அதிலிருந்து ஒரு தேசத்திற்கு உணவளிக்கவும்’: கென்டக்கி விவசாயிகளுக்கும் ஒரு நிழலான AI நிறுவனத்திற்கும் இடையே $26M நிலைப்பாடு உள்ளே | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 24, 2026
    உலகம்

    ‘உள்நாட்டுப் போராகப் போகிறது’: போட்டி நாளில் வெளிநாட்டு மருத்துவர்கள் அமெரிக்க வதிவிட இடங்களைப் பெற்றதால் கோபமடைந்த MAGA | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வேற்றுகிரகவாசிகள் இருக்கக்கூடிய 45 கிரகங்களை விஞ்ஞானிகள் வெளிப்படுத்துகின்றனர்: தொலைநோக்கிகள் வாழ்வின் அறிகுறிகளைக் கண்டறியும் முக்கிய இலக்குகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அவகேடோ வளரும் குறிப்புகள்: வெண்ணெய் பழங்களை வாங்குவதை நிறுத்துங்கள்! உங்கள் பால்கனி தோட்டத்தில் அவற்றை எப்படி எளிதாக வளர்த்து பெரிய பணத்தை சேமிப்பது என்பதை இங்கே பார்க்கலாம் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கிரிக்கெட் வீரராக முடியாத நிலையில் இருந்து ‘துரந்தர்’ திரைப்பட தயாரிப்பாளர் வரை: ஆதித்யா தரின் ஊக்கமளிக்கும் பயணம்
    • வெள்ளரிக்காய் கசப்பாக இருந்தால் வெட்டாமல் எப்படி கண்டுபிடிப்பது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பைரன் கேட்டி மேற்கோள்: பைரன் கேட்டியின் அன்றைய மேற்கோள்: “வாழ்க்கை எளிதானது. எல்லாம் உங்களுக்காக நடக்கும், உங்களுக்காக அல்ல. எல்லாம் சரியாக நடக்கும்…” – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.