
மாஸ்கோ: அணு சக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதை எந்த வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என கூறப்படுகிறது.
ரஷ்யா ‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ என்ற அணு சக்தி ஏக்தி ஏவுகணையை கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. சக்திவாய்ந்த ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுடவேண்டாம் என்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு வெளியேறியது. இதையடுத்து நேட்டோ படைகள் விரிவுபடுத்தப்பட்டன. அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டன.

