நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். அது ஒரு நம்பமுடியாத நாடு, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் அங்கு இருப்பார். ஆனால், என் நண்பர் மோடி நீண்ட காலமாக அங்கு தலைவராக இருக்கிறார்” என தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப்பின் கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக மறுத்தது. இது தொடர்பாக அதே 16ம் தேதி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பதிவில், “எண்ணெய் மற்றம் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் தொடர்ச்சியான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இந்த அடிப்படையில்தான் எங்களின் இறக்குமதி கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.

