துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு ஆட்களை ஏற்றிச் செல்ல அந்த படகு சென்றது. செல்லும் வழியில் அந்தப் படகு கடலில் திடீரென கவிழ்ந்தது. இதில் இருந்த 9 பேரும் மூழ்கினர். இந்த விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
கடலில் விழுந்த 6 பேர் மீட்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். மொசாம்பிக்கில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.

