Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
    உலகம்

    முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

    adminBy adminSeptember 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்றைய நவீன மருத்துவ துறையில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அதன் தன்மையை பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவது உண்டு. சில நேரங்களில் அறுவை சிகிச்சை மூலம் முறிந்த எலும்புகளை சேர்க்க/கூட்ட உலோகத்தை பயன்படுத்துவது உண்டு. எலும்பு கூடிய பிறகு பொருத்தப்பட்ட உலோகத்தை மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது உண்டு. சிலருக்கு அந்த உலோகம் உடலில் உள்ள எலும்போடு அப்படியே இருப்பதும் உண்டு.

    இந்த சூழலில் இதற்கு மாற்றாக எலும்புகளை ஒட்ட வைக்கும் பசைகளை சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் இதை உருவாக்கி உள்ளனர். சிப்பிகள் நீருக்கடியில் சில இடங்களில் உறுதியாக ஒட்டிக்கொண்டிருப்பதை கவனித்த பிறகு இந்த எலும்பு பசையை உருவாக்கும் யோசனையை பெற்றதாக எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் லின் சியான்ஃபெங் தெரிவித்துள்ளார்.

    இந்த பசையை கொண்டு உடைந்த எலும்புகளை மூன்று நிமிடங்களில் ஒட்ட முடியும் என லின் கூறியுள்ளார். எலும்புகள் குணமடைந்ததும் இந்த பசை தானாகவே கரைந்து விடும் என அவர் கூறியுள்ளார். ‘போன்-02’ என அறியப்படும் இந்த பசையின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு தன்மை உள்ளிட்டவை ஆய்வு கூடத்தில் சோதனை நடத்தியதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 150 பேருக்கு இதை கொண்டு பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    தற்போது சந்தையில் எலும்பு சிமெண்ட்கள், Void ஃபில்லர்ஸ் மாதிரியானவை கிடைக்கின்றன. ஆனால், எலும்புகளை ஒட்ட வைக்கும் பசை என ‘போன்-02’ அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் அறிமுகமாகும் போது எலும்பு முறிவு சிகிச்சையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மெட்டல் இம்பிளான்ட் செய்ய வேண்டிய தேவை இருக்காது.

    Chinese researchers on Tuesday unveiled their self-developed world’s first “bone glue” material capable of securely bonding fractured bone fragments within 2-3 minutes in a blood-rich environment.

    Inspired by oysters, this new biomaterial, with a maximum adhesion strength of over… pic.twitter.com/7ozvRrQBP0


    — China Science (@ChinaScience) September 10, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ”ஊழலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன்” – நேபாள பிரதமர் சுசீலா கார்கி உறுதி

    September 14, 2025
    உலகம்

    ‘குடியேறிகளே வெளியேறுங்கள்’ – லண்டனில் 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி: பின்னணி என்ன?

    September 14, 2025
    உலகம்

    ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் – நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

    September 14, 2025
    உலகம்

    போரை நிறுத்தும் நோக்கிலான பொருளாதார தடைகள் நிலைமையை சிக்கலாக்கும் – சீனா

    September 14, 2025
    உலகம்

    நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

    September 14, 2025
    உலகம்

    50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ”ஊழலை முடிவுக்குக் கொண்டுவர பாடுபடுவேன்” – நேபாள பிரதமர் சுசீலா கார்கி உறுதி
    • ”மகிழ்ச்சி காரணமாக அதிகம் பேச இயலவில்லை” – பாராட்டு விழா குறித்து இளையராஜா நெகிழ்ச்சி
    • மழை பெய்தாலே வெள்ளக்காடாக மாறும் மதுரை சாலைகள் – என்று தீரும் இந்த பிரச்சினை?
    • பெண்களை விட ஆண்கள் ஏன் இரத்த புற்றுநோயை எதிர்கொள்கின்றனர்: லிம்போமா ஆபத்து காரணிகள், ஹார்மோன்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘குடியேறிகளே வெளியேறுங்கள்’ – லண்டனில் 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி: பின்னணி என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.