முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் 38 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி
வருகின்றனர்.
இதற்கு ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஏஏசி) தலைமை தாங்கியது. போராட்டத்தின் 3-வது நாளான நேற்று பேரணி நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து, முசாபராபாத், தத்யா,ரவாலாகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேரணியைத் தடுக்க போலீஸார் ஏற்படுத்திய தடைகளை தாண்டி மக்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்கள், ‘‘காஷ்மீர் எங்களுடையது, அதன் விதியை நாங்கள்தான் நிர்ணயிப்போம். ’’ என கோஷமிட்டனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் முதல் முறையாக தற்போதுதான், பாகிஸ்தான் அரசுக்கும்,ராணுவத்துக்கும் எதிராக கோஷமிட்டனர் நிலைமை மோசமடைந்ததால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் துப்பாக்கி சூடுநடத்தினர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். 200-க்கும்மேற்பட்டோர் குண்டுகாயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸார் உயிரிழந்தனர். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளார்.