
காசா: இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ஹமாஸ் அமைப்பினர் இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. அந்த உடல்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

