Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, April 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பாதாள அறையில் தஞ்சமடைந்த கொமேனி
    உலகம்

    பாதாள அறையில் தஞ்சமடைந்த கொமேனி

    adminBy adminJune 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாதாள அறையில் தஞ்சமடைந்த கொமேனி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெஹ்ரான்: இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி (86) குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார்.

    கடந்த 13-ம் தேதி ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் விமானப் படை திடீர் தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் 4 அணு சக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. அந்த நாட்டின் 14 அணு சக்தி விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. நான்காவது நாளாக நேற்றும் போர் நீடித்தது.

    ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உளவுத் துறை தலைவர் முகமது கசாமி நேற்று கொல்லப்பட்டார். தெஹ்ரானில் உள்ள ஈரான் பாதுகாப்புத் துறை தலைமை அலுவலகம், வெளியுறவுத் துறை அலுவலகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் இரு அலுவலகங்களும் தரைமட்டமாகின.

    ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி, தலைநகர் தெஹ்ரானின் வடகிழக்கில் லாவிஜான் பகுதியில் உள்ள பாதாள அறையில் குடும்பத்துடன் தஞ்சமடைந்து உள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

    கடந்த 13-ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தினோம். அன்றைய தினமே அயத்துல்லா அலி கொமேனி மீதும் தாக்குதல் நடத்தியிருக்க முடியும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறோம்.

    ஈரானின் அணு ஆயுத திட்டத்தை அவர் முழுமையாக கைவிட வேண்டும். இல்லையெனில் அணு ஆயுத திட்டத்துக்கான கட்டமைப்புகளை இஸ்ரேல் முழுமையாக அழிக்கும். அயத்துல்லா அலி கொமேனி பாதாள அறையில் பதுங்கியிருந்தாலும் எங்களால் தாக்குதல் நடத்த முடியும். இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியதாவது: கடந்த 1979-ம் ஆண்டில் ஈரானில் புரட்சி ஏற்பட்டது. அப்போது மன்னராட்சி அகற்றப்பட்டது. இதன்பிறகு ஷியா பிரிவு மதத் தலைவர்களே ஈரானை ஆட்சி செய்து வருகின்றனர். அந்த நாட்டின் அதிபர் மசூத் பெசெஷ்கியன், பெயரளவுக்கு மட்டுமே அதிபராக பதவி வகிக்கிறார்.

    தற்போதைய ஷியா மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியே ஈரானை திரைமறைவில் ஆட்சி செய்து வருகிறார். அவரை அகற்றிவிட்டு, ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இஸ்ரேல் வியூகம் வகுத்து உள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், ஏமனை சேர்ந்த ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த 3 தீவிரவாத அமைப்புகளும் வலுவிழந்துவிடும். எனவே ஈரானுக்கு எதிரான போரை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி வருகிறது. இவ்வாறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி யுடி ஆஸ்டின் மாணவி சவிதா ஷனின் நினைவாக குடும்பம் உதவித்தொகையை அமைத்துள்ளது. உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 8, 2026
    உலகம்

    H-1B லாட்டரியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்: ரெடிட்டர் இந்தியாவிற்கு திரும்பி வர விரும்புகிறார், ‘வித்தியாசமான சோகமாகவும் குழப்பமாகவும் உணர்கிறேன்’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 8, 2026
    உலகம்

    நியூயார்க் மாநிலத்தில் $200,000 மோசடி செய்த இந்தியர் கைது; மக்களை அழைத்து, ‘நீங்கள் வாரண்டில் தேடப்படுகிறீர்கள்’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 8, 2026
    உலகம்

    கனடாவில் உள்ள இந்தியப் பெண் ‘கவனச்சிதறல் திருட்டு’க்கு பலியான பிறகு அதிர்ச்சியடைந்தார், நான்கு தங்க வளையல்கள் மணிக்கட்டில் கழற்றப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 7, 2026
    உலகம்

    1965 இல் NYC ஒருமுறை வானளாவிய கூரைகளில் இருந்து விமான நிலையங்களுக்கு ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டது உங்களுக்குத் தெரியுமா? இதோ எப்படி எல்லாம் தவறாக நடந்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 7, 2026
    உலகம்

    டாக்டர் அசோக் ஜெயின் யார்? தனது ராஜஸ்தான் கிராமத்தில் $750,000 மதிப்பில் பள்ளியை கட்டிய இந்திய வம்சாவளி குழந்தை மருத்துவர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நவீன ஆடம்பரத்தை வரையறுக்கும் ரூதுராஜ் கெய்க்வாட்டின் ₹8 கோடி புனே இல்லத்தின் உள்ளே
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: குழந்தை, ஜோடி, மரங்கள்? நீங்கள் முதலில் பார்ப்பது, நீங்கள் தனிமையில் இருப்பது, சிலருடன் இருப்பது, அல்லது காதல் வாழ்க்கையில் மாற்றங்கள் போன்றவற்றை வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வைபவ் சூரியவன்ஷி: இளம் கிரிக்கெட் உணர்விலிருந்து பதின்வயதினர் கற்றுக்கொள்ளக்கூடிய 5 விஷயங்கள்
    • அவர் கடினமாக உழைத்தார், விடுமுறை எடுப்பதைத் தவிர்த்தார், ஆனால் பணிநீக்கம் செய்யப்பட்டார்: முன்னாள் கூகுள் தொழில்நுட்ப வல்லுநர் வேலை-வாழ்க்கை சமநிலை பற்றி கடுமையான பாடம் கற்றுக்கொண்டார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முடி பராமரிப்பு குறிப்புகள்: Ozempic முடி உதிர்வை ஏற்படுத்துமா? யாரும் பேசாத பக்க விளைவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.