Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பஹல்காம் தாக்கம்: இந்தியாவின் 5 அதிரடி அறிவிப்புகளுக்கு பாகிஸ்தான் ரியாக்‌ஷன் என்ன?
    உலகம்

    பஹல்காம் தாக்கம்: இந்தியாவின் 5 அதிரடி அறிவிப்புகளுக்கு பாகிஸ்தான் ரியாக்‌ஷன் என்ன?

    adminBy adminApril 28, 2025No Comments5 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் தாக்கம்: இந்தியாவின் 5 அதிரடி அறிவிப்புகளுக்கு பாகிஸ்தான் ரியாக்‌ஷன் என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பயங்கரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் எவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது என்று பார்ப்போம்.

    இந்தியாவின் ஐந்து நடவடிக்கைகளில் சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தும் உத்தரவு, பாகிஸ்தானுக்கு பேரிடியாக இறங்கியுள்ளது எனலாம். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக, உலக வங்கி உதவியுடன் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் பல்வேறு போர், வெறுப்புகளைக் கடந்தும் இரு நாடுகளும் தொடர்ந்து அதை மீறாமல் உள்ளன. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டால், அது பாகிஸ்தானில் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். குடிநீர் பஞ்சத்தோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். இதுதான் பாகிஸ்தானுக்கான மிகப் பெரிய தண்டனையாக இருக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். இது தவிர, சாலை எல்லைகளை இந்திய அரசு மூடியுள்ளது. இது பாகிஸ்தான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரித்துள்ளது. தூதரக ரீதியாகவும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்து ரீதியாக பாகிஸ்தான் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

    பாக். பிரதமர் அவசர ஆலோசனை: இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இன்று காலை அந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்திய அரசின் நடவடிக்கை மீது இன்று மாலை பாகிஸ்தான் எதிர்வினையாற்றும் என பாகிஸ்தான் பிரதமர், வெளியுறவு அமைச்சர் இசாக் தர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பாக். துணை பிரதமர் கண்டனம்: முன்னதாக, தொலைக்காட்சியில் பேசிய பாகிஸ்தான் துணை பிரதமர், “இந்திய அரசு எந்தவித ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. அவர்களுடைய எதிர்வினை முதிரிச்சியற்றதாக உள்ளது. அவர்கள் எதையும் அக்கறையோடு அணுகவில்லை. அச்சம்பவத்துக்குப் பின்னர் இந்தியா அவசர கதியில் எதிர்வினையாற்றியுள்ளது” என்று கூறியிருந்தார்.

    அதேபோல், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். தங்களின் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்” என்று மட்டும் தெரிவித்திருந்தது.

    பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை: ஏற்கெனவே பாக். பிரதமர் தலைமையில் இன்று காலை ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், பின்னர், தேசிய பாதுகாப்பு குழுவானது ஓர் அவசர ஆலோசனைக் குழு கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்துக்கும் பாகிஸ்தான் பிரதமர் தலைமை வகிக்கிறார். இதில் இந்தியாவுக்கான எதிர்வினை இறுதி செய்யப்பட்டது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

    இந்தியா முற்படுவது ‘போர் நடவடிக்கை’ – சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்தியாவின் அறிவிப்பை பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கிறது. இந்த ஒப்பந்தம் உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். மேலும், ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைப்பதற்கான எந்த ஏற்பாடும் இதில் இல்லை. சிந்து நதிநீர் பாகிஸ்தானின் தேசிய நலனுக்கு மிகவும் முக்கியமானது, பாகிஸ்தானின் 24 கோடி மக்களுக்கு அது உயிர்நாடி.

    சிந்து நதிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த எத்தகைய விலையையும் பாகிஸ்தான் கொடுக்கும். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரின் ஓட்டத்தைத் தடுப்பது அல்லது திசைதிருப்புவது, ஆற்றின் கீழ் பகுதியின் உரிமைகளை அபகரிப்பதாகும். இது ஒரு போர்ச் செயலாகக் கருதப்படும். சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டால் பாகிஸ்தான் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி பதிலளிக்கும்.

    இந்தியா மீதான பதில் நடவடிக்கைகள்: சர்வதேச மரபுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் ஆகியவற்றை மதிக்காத பொறுப்பற்ற ஒரு நாடு இந்தியா. அது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்தைத் தூண்டுகிறது, படுகொலைகளை நிகழ்த்துகிறது, காஷ்மீர் மீதான சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. தீர்மானங்களை பின்பற்ற மறுக்கிறது. இத்தகைய வெளிப்படையான நடத்தையை இந்தியா கைவிடும் வரை, சிம்லா ஒப்பந்தம் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்தும்.

    வாகா எல்லைச் சாவடியை பாகிஸ்தான் உடனடியாக மூடும். இந்தப் பாதை வழியாக இந்தியாவிலிருந்து அனைத்து எல்லை தாண்டிய போக்குவரத்தும் விதிவிலக்கு இல்லாமல் நிறுத்தப்படும். அரசின் ஒப்புதலுடன் கடந்து சென்றவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் அந்த வழியாக திரும்பலாம். அதன்பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் இந்திய நாட்டினருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. சீக்கிய மத யாத்ரீகர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகிறது. SVES-இன் கீழ் பாகிஸ்தானில் தற்போது உள்ள இந்தியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானப் படைகளின் ஆலோசகர்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் ஏப்ரல் 30-க்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். இந்த ஆலோசகர்களுக்கு உதவும் பணியில் உள்ள ஊழியர்களும் இந்தியாவுக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ஏப்ரல் 30 முதல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும். இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானின் வான்வெளி உடனடியாக மூடப்படும். இந்தியாவுடனான அனைத்து வர்த்தகமும் நிறுத்தப்படுகிறது. எந்தவொரு தவறான சாகசத்துக்கு எதிராக செயல்பட, இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க நாட்டின் ஆயுதப்படைகள் முழுமையாகவும் தயாராக உள்ளன என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் 5 அதிரடி முடிவுகள் என்னென்ன? – முன்னதாக, காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பயங்கரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

    1. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது.

    2. பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும்.

    3. சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

    4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

    5. இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்படுகிறது.

    முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு எல்லையில் பெருமளவில் படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, பாதுகாப்பு படை தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் கூறும்போது, “தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு விரைவில் வலுவான பதிலடி கொடுக்கப்படும். தாக்குதல் நடத்தியவர்களுக்கு மட்டும் அல்ல இந்த சதித்திட்டத்துக்கு காரணமானவர் களுக்கும் பதிலடி கிடைக்கும். தீவிர வாதத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு: ஒருவர் கடத்தல்

    July 19, 2025
    உலகம்

    இந்தியா – பாக். மோதலின்போது 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: டொனால்ட் ட்ரம்ப்

    July 19, 2025
    உலகம்

    பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் தொடர்பு இல்லை: பாக். தகவல்

    July 19, 2025
    உலகம்

    பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு

    July 19, 2025
    உலகம்

    பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

    July 19, 2025
    உலகம்

    அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதில் உக்ரைனுடன் உடன்படுகிறேன் – புதின்

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டுக்காக ரூ.21.47 கோடி அபராதம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
    • இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க ’10 -10-10 விதி ‘, மருந்துகள் தேவையில்லை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘போதைப் பொருள் இல்லாத இந்தியா’ பிரச்சாரத்தில் இணைவீர்: இளைஞர் ஆன்மிக மாநாட்டில் மத்திய அமைச்சர் அழைப்பு
    • சிவகாசியில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்: பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம்
    • உங்கள் 40 கள், 50 கள் மற்றும் 60 களில் இந்த இதய எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.