Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, March 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பிலாவல் பூட்டோ
    உலகம்

    பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பிலாவல் பூட்டோ

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பிலாவல் பூட்டோ
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நியூயார்க்: பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை என அமெரிக்காவில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்திய தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான இந்திய அனைத்துக் கட்சிக் குழு வாஷிங்டனுக்கு வந்துள்ள நாளில், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழுவும் தங்கள் தரப்பின் கருத்தை எடுத்துரைக்க நியூயார்க் வந்துள்ளது.

    பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான பிலாவல் பூட்டோ, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த ஒரு மாநாட்டில் ஆற்றிய உரையில், “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாகிஸ்தான் இன்னும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. அதுதான் அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதை. மக்களின் தலைவிதியை அரசு சாராதவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கைகளில் விட்டுவிட முடியாது. இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே தகராறை தீர்க்கும் வழிமுறைகள் இல்லாமல் இருக்க முடியாது.

    பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் இந்திய உளவு அமைப்பான ரா (RAW) ஆகியவை அமர்ந்து பேசி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடத் தயாராக இருந்தால், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பயங்கரவாதம் கணிசமாகக் குறைவதைக் காண்போம் என்று நான் முழுமையாக நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

    ஆபரேஷன் சிந்தூரின் போது நடத்தப்பட்ட தாக்குதல்களாலும், இந்தச் சூழ்நிலையில் அமைதியைத் தேட வேண்டிய தேவையாலும் பாகிஸ்தான் எவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பூட்டோவின் தற்போதைய சமாதான நிலைப்பாடு காட்டுகிறது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தால் பாகிஸ்தான் தரப்பு பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. இந்திய விமானப்படையால் பாகிஸ்தான் விமானப்படைக்கு ஏற்பட்ட சேதம் குறித்த தொடர்ச்சியான பகுப்பாய்வின்படி, 6 பிஏஎப் போர் விமானங்கள், இரண்டு உயர் மதிப்புள்ள விமானங்கள், 10-க்கும் மேற்பட்ட யுசிஏவி (UCAV), ஒரு சி-130 போக்குவரத்து விமானம் மற்றும் பல கப்பல் ஏவுகணைகள் ஆகியவை இந்திய வான்வழி ஏவுகணைகள் மற்றும் தரையிலிருந்து பாயும் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டன எனும் தகவல் வெளியாகியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஈரான் போர்: ஏழாவது அமெரிக்க சேவை உறுப்பினர் சவுதி அரேபியாவில் காயமடைந்து இறந்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ‘குண்டை வீசியது யார் என்று சொல்ல மாட்டேன்’: இஸ்லாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட பின்னர் லாரா லூமர் மம்தானியைத் தாக்குகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    சோர்ஃப்லி டேவியஸ் யார்? ஆபரேஷன் எபிக் ப்யூரியின் போது குவைத்தில் இறந்த NYPD அதிகாரி மற்றும் அமெரிக்க இராணுவ மேஜர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 8, 2026
    உலகம்

    வாட்ச்: தென்மேற்கு விமானத்தில் இருந்து பயணிகள் அகற்றப்பட்டனர், ‘பாதுகாப்புக் கவலை’ அட்லாண்டாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 8, 2026
    உலகம்

    காண்க: புதிய பாடிகேம் வீடியோ டெக்சாஸில் அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்றதில் ICE உரிமைகோரல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    மிச்சிகனில் இருந்து ஓக்லஹோமா வரை: 6 பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்கா முழுவதும் பயங்கர சூறாவளி வீசியதால் வீடுகள் அழிக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இயக்கத்தில் கவிதை: ஐஸ்வர்யா ராய் பச்சன் ரீகல் ஆஃப்-ஒயிட் சிக்கன்காரி குர்தா மற்றும் மரகதங்களில் திகைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கருப்பு மழை என்றால் என்ன? எண்ணெய் தீ, புகை மற்றும் வளிமண்டல மாசுபாடு மழையை இருட்டாகவும், தீங்கு விளைவிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குஜராத்தின் வதோதராவில் ஹர்திக் பாண்டியாவின் 6,000 சதுர அடி பென்ட்ஹவுஸ் சொகுசு அம்சங்களுடன் நிரம்பிய கனவு இல்லம்.
    • தொட்டிகளை இயற்கையாக சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 மீன் மீன்கள்
    • மால் எலிகள் திரும்பி வந்ததா? 2026 இல் இணையத்தின் விருப்பமான ஷாப்பிங் மால் சகாப்தத்தை Gen Z எவ்வாறு புதுப்பிக்கிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.