Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, February 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»“பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது” – டொனால்டு ட்ரம்ப்
    உலகம்

    “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது” – டொனால்டு ட்ரம்ப்

    adminBy adminApril 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது” – டொனால்டு ட்ரம்ப்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும் ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன” இவ்வாறு ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் மனைவி உஷாவும் நானும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமீப நாட்களாக, இந்த நாட்டின் அழகையும் அதன் மக்களையும் கண்டு நாங்கள் வியந்து போயுள்ளோம். இந்த கொடூரமான தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கும் வேளையில், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

    தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுமார் 27 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசி உள்ளார். இது தொடர்பாக அனைத்து அடிப்படை பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு படையினருடன் முக்கிய கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித் ஷா, ஸ்ரீநகர் புறப்பட்டுள்ளார்.

    உதவி எண்கள் அறிவிப்பு: அனந்த்நாக் காவல் துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளின் உதவிக்காக அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தொடர்பு கொள்ள 9596777669, 01932225870 மற்றும் வாட்ஸ்அப் எண் 9419051940 அணுகலாம்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    McCaughey septuplets: ஒன்றாகப் பிறந்த உலகின் முதல் ஏழு குழந்தைகள்; அவர்கள் இப்போது எங்கே? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 1, 2026
    உலகம்

    ஹாலிவுட்டில் இருந்து சிலிக்கான் பள்ளத்தாக்கு வரை: எப்படி ஆஷ்டன் குட்சர் ஒரு பில்லியன் டாலர் தொழில்நுட்ப முதலீட்டு சாம்ராஜ்யத்தை ரகசியமாக உருவாக்கினார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 31, 2026
    உலகம்

    லின்வே டிங் யார்? சீனாவிற்கான அமெரிக்க AI வர்த்தக ரகசியங்களை திருடியதற்காக முன்னாள் கூகுள் பொறியாளர் தண்டனை | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 31, 2026
    உலகம்

    இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது சொந்த உணவகத்திற்கு தீ வைத்ததற்காக இந்திய வம்சாவளி நபர் கனடாவில் கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 30, 2026
    உலகம்

    முதியவர்களைக் குறிவைத்து $55 மில்லியன் மோசடி: டெக்சாஸில் இரண்டு இந்திய நகைக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது, பாதிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தங்கம் வாங்கச் சொன்னார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 30, 2026
    உலகம்

    200,000 ரியல் எஸ்டேட் மோசடி செய்ததற்காக ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் உள்ள இந்திய ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டார், வீடு வாங்குபவரை ஏமாற்ற சட்ட நிறுவனமாக ஆள்மாறாட்டம் செய்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹுடா பியூட்டி புறக்கணிப்பு அழைப்புகளுக்கு மத்தியில் மோனா கட்டான் ஹுடா கட்டானைப் பின்தொடர்வதை நிறுத்திய பிறகு இணையம் வெடித்தது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இது உலகின் மிக விலையுயர்ந்த வீடு: செல்வம் அதிகாரத்தை சந்திக்கும் இடம் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜெர்மனியில் இருந்து கடல் வரை 10 நாடுகளை கடக்கும் நதி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • McCaughey septuplets: ஒன்றாகப் பிறந்த உலகின் முதல் ஏழு குழந்தைகள்; அவர்கள் இப்போது எங்கே? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் மைக்ரோவேவின் மேல் பொருட்களை வைப்பது ஏன் நீங்கள் நினைப்பதை விட பெரிய ஆபத்தாக இருக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.