Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, April 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»நேபாள கலவரம்: கள சூழலை காட்டிய பிரிட்டிஷ் யூடியூபரின் வீடியோ பதிவு
    உலகம்

    நேபாள கலவரம்: கள சூழலை காட்டிய பிரிட்டிஷ் யூடியூபரின் வீடியோ பதிவு

    adminBy adminSeptember 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நேபாள கலவரம்: கள சூழலை காட்டிய பிரிட்டிஷ் யூடியூபரின் வீடியோ பதிவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காத்மாண்டு: நேபாள நாட்டில் ஆளும் அரசுக்கு எதிராக ‘ஜென் இசட்’ தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு கலவரம் ஏற்பட்டது.

    இந்த சூழலில் அங்கு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கலைந்து செல்லும் வகையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருப்பினும் இதற்கு பலன் இல்லாமல் போனது. இந்நிலையில், இந்த போராட்டம், இளைஞர்கள் மீதான தாக்குதல், இளைஞர்கள் மேற்கொண்ட தாக்குதல் என பல கோணங்களில் ‘நேபாள வன்முறை’ சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து, அதை தனது யூடியூப் சேனலிலும் பகிர்ந்துள்ளார் பிரிட்டன் நாட்டை சேர்ந்த யூடியூபர் ஹேரி.

    அவரது இந்த வீடியோ உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. அதற்கான காரணம் அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பக்கம் இருந்து இந்த வீடியோவை பதிவு செய்ததுதான். அதோடு இடையிடையே கண்ணீர் புகை குண்டு வீச்சில் இருந்து தப்பி செல்வது மற்றும் போராட்டக்காரர்களின் கருத்தையும் இதில் அவர் படம் பிடித்துள்ளார். பிரதான மற்றும் முதன்மை ஊடக நிறுவனங்கள் களத்தில் செய்ய தவறியதை அவர் தனி ஒருவராக செய்துள்ளார். அதனால் அதற்கு உலக அளவில் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.

    நேபாளத்தில் செப்.8-ம் தேதி வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். 300 பேர் காயமடைந்துள்ளனர். அன்றைய தினம் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஹேரி, இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். ‘Wehatethecold’ என்ற யூடியூப் சேனலில் இதை அவர் பதிவு செய்துள்ளார். சுமார் 23 நிமிடங்களை ரன்டைமாக கொண்டுள்ளது இந்த வீடியோ.

    போராட்டம் நடைபெற்ற இடம் அருகே சென்ற அவரிடம், ‘உங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்’ என நேபாளத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்க, போராட்ட களத்தில் அவர்களுடன் சேர்ந்து இந்த வீடியோவை ஹேரி பதிவு செய்துள்ளார். இதற்காக களத்தில் சில மணி நேரம் அவர் இருந்துள்ளார். அவரது இந்த தீரமிக்க செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.

    கண்ணீர் புகை குண்டு வீச்சில் இருந்து தப்பியது ஆகட்டும், போராட்டத்தின் போதே அதற்கான காரணத்தை கேட்டு பெற்றதும், முக்கிய கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்பு படை வாகனங்கள் மீதான தாக்குதல் என அனைத்தையும் ஹேரி இதில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இப்போது மில்லியன் கணக்கான பார்வையை கடந்துள்ளது.

    நேபாள வன்முறை: நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்​து, நாட்​டின் அதிப​ராக இருந்த ராம்​சந்​திர பவுடேலும் ராஜி​னாமா செய்​தார். இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது.

    நேபாளத்​தில் நிலவி வரும் அரசி​யல் பதற்​ற​மான சூழ்​நிலை காரண​மாக சட்​டம்​ – ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது. மேலும், நாட்​டின் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்​வேறு பகு​தி​களில் வன்​முறைச் சம்​பவங்​கள் தொடர்​கின்​றன. ஊழல் அரசியல்வாதிகளின் வசிப்பிடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    நேபாளத்​தில் அமைதி திரும்​பாத நிலை​யில், பல்​வேறு நகரங்களில் ஊரடங்கு உத்​தரவு அமலில் உள்​ளது. காத்​மாண்டு முழு​வதும் போலீ​ஸாரும், ராணுவத்​தினரும் குவிக்​கப்​பட்​டு, கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்​. >>வீடியோ லிங்க்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பாஸ்டன் மராத்தான் 2026: சமீபத்திய எதிர்பார்க்கப்படும் பந்தய நிலைமைகள், தேதி, பாதை மற்றும் வானிலை முன்னறிவிப்பைச் சரிபார்க்கவும் | சர்வதேச விளையாட்டு செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    EB-5 இல் முதலீடு செய்வதன் மூலம் இந்தியர்கள் ஒரு உதவி செய்கிறார்கள்: தொழில்நுட்ப தொழில்முனைவோர் ‘இனவெறி குப்பைகளை’ நிறுத்த அழைப்பு – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    வைரல் வீடியோவில் பார்க்கிங் ஸ்பாட் சண்டையின் போது அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி மருத்துவர் கரும்பு குச்சியைப் பயன்படுத்துவதைக் கண்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    கரிஷ்மா விஜய் யார்? ஆலன் சுகர் சலசலப்புக்குப் பிறகு இந்திய வம்சாவளி பயிற்சி 2026 இறுதிப் போட்டி வைரலாகும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    ‘என் அம்மாவின் கதை தனித்துவமானது அல்ல’: ICE ஆல் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளி மொழிபெயர்ப்பாளரான மீனு பாத்ராவின் மகள், மௌனம் உடைக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    உலகம்

    பராக் ஒபாமாவின் அன்றைய மேற்கோள்: “எங்கள் பிரச்சினைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை, எனவே அவை மனிதனால் தீர்க்கப்படும், மேலும் மனிதன் நாம் விரும்பும் அளவுக்கு பெரியதாக இருக்க முடியும்.” | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சீராக இருக்க போராடுகிறீர்களா? பெண்களுக்கான இந்த 5 ஒர்க்அவுட் மேற்கோள்கள் நீங்கள் உடற்தகுதியைப் பார்க்கும் விதத்தை மாற்றும்
    • பாஸ்டன் மராத்தான் 2026: சமீபத்திய எதிர்பார்க்கப்படும் பந்தய நிலைமைகள், தேதி, பாதை மற்றும் வானிலை முன்னறிவிப்பைச் சரிபார்க்கவும் | சர்வதேச விளையாட்டு செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: வயதான ஆணா, இளம் பெண்ணா அல்லது ஆணாக மலை ஏறுகிறாரா? நீங்கள் முதலில் பார்ப்பது நீங்கள் போட்டித்தன்மையுள்ளவரா, மென்மையானவரா அல்லது மன அழுத்தத்தில் பாதிக்கப்படக்கூடியவரா என்பதை வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘சீகல்லிங்’ என்றால் என்ன? தந்திரமான டேட்டிங் போக்கு உங்களை கவர்ந்திழுக்கும்: கவனிக்க வேண்டிய 3 அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவின் சொகுசு ரியல் எஸ்டேட்டை வடிவமைக்கும் முதல் 7 தெற்கு மும்பையின் உயர்நிலை சுற்றுப்புறங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.