Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, February 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»நேபாளத்தில் 2வது நாளாக நீடிக்கும் போராட்டம் – இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை
    உலகம்

    நேபாளத்தில் 2வது நாளாக நீடிக்கும் போராட்டம் – இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை

    adminBy adminSeptember 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நேபாளத்தில் 2வது நாளாக நீடிக்கும் போராட்டம் – இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: நேபாளத்தில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரிகள் வெளியிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். நேபாளத்தில் போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

    வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், “நேபாளத்தில் நேற்று முதல் நடக்கும் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் பல இளம் உயிர்களை இழந்ததில் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நாங்கள் விரும்புகிறோம்.

    நமது நெருங்கிய நட்பு நாடாகவும், அண்டை நாடாகவும் உள்ள நேபாளத்தில் உள்ள அனைவரும் நிதானத்தைக் கடைப்பிடித்து, அமைதியான வழிமுறைகள் மற்றும் உரையாடல் மூலம் எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். காத்மாண்டு மற்றும் நேபாளத்தின் பல நகரங்களில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், நேபாள அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    நடந்தது என்ன? – பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட பதிவு செய்​யப்​ப​டாத 26 சமூக வலை​தளங்​களை நேபாள அரசு முடக்​கி​யது. இதனால், கடந்த வெள்​ளிக்​கிழமையி​லிருந்து அவற்றை பயன்​படுத்த முடி​யாமல் இளைஞர்​கள் தவித்து வந்தனர்.

    இதையடுத்து சமூக வலை​தளங்​கள் மீதான தடையை விலக்க கோரி​யும், நாட்​டில் பரவி​யுள்ள ஊழல் கலாச்​சா​ரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்கக் கோரி​யும் நேற்று ஆயிரக்​கணக்​கான இளைஞர்​கள் ஒன்று திரண்டு தலைநகர் காத்​மாண்​டு​வில் பேரணி நடத்​தினர். அப்​போது நியூ பனேஷ்வரில் நாடாளு​மன்​றத்​துக்கு வெளியே போடப்​பட்​டிருந்த தடுப்​பு​களை தாண்டி போ​ராட்​டக்​காரர்​கள் உள்ளே நுழைய முயன்​றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்​டின் மீது கற்​களை வீசி எரிந்​தும் தாக்​குதல் நடத்​தினர்.

    இதையடுத்​து, போ​ராட்​டக்​காரர்​களுக்​கும் பாது​காப்பு படை​யினருக்​கும் இடையே மோதல் மூண்​டது. பாது​காப்பு படை​யினர் கண்​ணீர் புகை குண்​டு​களை வீசி​யும், ரப்​பர் தோட்​டாக்​களால் சுட்​டும், தண்​ணீரை பீய்ச்​சி​யடித்​தும் போ​ராட்​டக்​காரர்​களை கலைக்க முயன்​றனர். இந்த கடும் மோதலில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

    நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் போ​ராட்​டக்​காரர்​களுக்​கும், போலீ​ஸாருக்​கும் இடையே மோதல் மூண்​டது. இதையடுத்து பல இடங்​களில் ஊரடங்கு உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. கலவரம் பரவி வரு​வதையடுத்து இந்​தி​யா-நே​பாளம் எல்​லை​யில் விழிப்​புடன் இருக்க அதி​காரி​களுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

    கடந்த ஆண்டு செப்​டம்​பரில் நேபாள உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பை தொடர்ந்​து, சமூகவலைதள நிறு​வனங்​கள் பதிவு செய்​ய​வும், குறைதீர்ப்பு அதி​காரியை நியமிக்​க​வும் ஏழு நாட்​கள் அவகாசம் வழங்க நேபாள அமைச்​சரவை கடந்த மாதம் முடிவு செய்​தது. இந்த நிலை​யில், பதிவு செய்​து​கொள்​ளாத பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட26 சமூக வலை​தளங்​களை கடந்த வெள்​ளிக்​கிழமை முடக்கி நேபாள அரசு நடவடிக்கை மேற்​கொண்​டது. ஆன்​லைன் மோசடி மற்​றும் பண மோசடி ஆகிய​வற்றை சுட்​டிக்​காட்டி இதேபோன்​று, கடந்த ஜூலை​யில் டெலிகி​ராம் மெசேஜ் செயலியை நேபாள அரசு தடை செய்​தது.

    இந்த நிலையில் எதிர்பார்க்காத அளவில் ஏராளமான இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால், சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதனை அந்நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரித்வி சுப்பா அறிவித்தார். இருப்பினும், இன்று காலை போராட்டங்கள் மீண்டும் தொடங்கின, போராட்டங்கள் ஊரடங்கு உத்தரவை மீறி நடந்தன. சாலைகளில் டயர்களை போட்டு எரித்தனர்.

    இதற்கிடையில், நேபாள வேளாண் அமைச்சர் ராம் நாத் அதிகாரி இன்று பிரதமர் கே.பி. ஒலி தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று அரசாங்கம் போராட்டங்களைக் கையாண்டதற்கு தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘நீங்கள் மருத்துவத்தில் தோல்வியடைந்தீர்கள், மனிதநேயம்’: எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மகளிர் மருத்துவ நிபுணர்களை இந்திய வம்சாவளி மருத்துவர் வெடிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    பரபரப்பான டொராண்டோ மாலுக்கு வெளியே இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் கொல்லப்பட்டார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பற்றி காவல்துறைக்கு துப்பு இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ.2 லட்சம் அபராதம்; அவள் வேலையில்லாதவள், சமூக சேவை செய்வேன் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    டோனி ஹாக்கின் திருமணம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தீவில் நடந்ததா? ஸ்கேட்போர்டிங் லெஜண்ட் பதிலளிக்கிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 8, 2026
    உலகம்

    “இஸ்லாம் இடம்பெயர்வு மீது கட்டமைக்கப்பட்ட மதம்”: NYC மேயர் மம்தானி குடியேற்றத்தைப் பற்றி பேசும் போது நபிகள் நாயகத்தின் ஹிஜ்ரத்தை அழைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 7, 2026
    உலகம்

    எப்ஸ்டீனின் மரணப் படுக்கை: பல மில்லியன் டாலர் செல்வத்தை வாரிசாகப் பெற யார் நின்றார்கள், பாதிக்கப்பட்டவர்கள் பற்றி என்ன? | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • AI உலகின் கார்பன் தடயத்தை ரகசியமாக அதிகரிக்கிறதா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு சொத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமா? ரியல் எஸ்டேட் சந்தை ஏற்றம் மற்றும் பேரழிவுகளை முன்னறிவிக்கும் 5 முக்கிய குறிகாட்டிகள்
    • நாசா கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கரிம மூலக்கூறுகளைக் கண்டறிந்தது, இது பண்டைய வாழ்க்கை தடயங்களை வெளிப்படுத்தியது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அவ்னீத் கவுரின் பிங்க் டாப் + வெள்ளை நிற பாவாடை தோற்றம் முக்கிய கதாபாத்திரத்திற்கு ஆற்றலை அளிக்கிறது – பாப்பராசியால் விலகிப் பார்க்க முடியாது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எந்த இடத்தை யூகிக்கவும்: இது ஒரு பொது சாலையைக் கடக்கும் விமான ஓடுபாதையைக் கொண்டுள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.