Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, March 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»‘தவறு மேல் தவறு’ – அமெரிக்காவின் 50% வரி எச்சரிக்கைக்கு சீனா எதிர்வினை!
    உலகம்

    ‘தவறு மேல் தவறு’ – அமெரிக்காவின் 50% வரி எச்சரிக்கைக்கு சீனா எதிர்வினை!

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘தவறு மேல் தவறு’ – அமெரிக்காவின் 50% வரி எச்சரிக்கைக்கு சீனா எதிர்வினை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்வதாகவும், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை. இறுதிவரை போராடுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

    அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன., ஏப்ரல் 10-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கான சீனாவின் பதிலடியாக இது அமைந்தது.

    இதனையடுத்து அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “சீனா ஏற்கனவே நிர்ணயித்துள்ள சட்டவிரோத வரிகளுடன் கூடுதலாக 34% பழிவாங்கும் வரிகளை விதித்தது. ஏப்ரல் 8-ம் தேதிக்குள் சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், மறுநாள் அதாவது, ஏப்ரல் 9-ம் தேதி முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். கூடுதலாக, சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும். பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும்” என்று எச்சரித்திருந்தார்.

    இந்நிலையில் தான், சீன அரசு இதழான க்ளோபல் டைம்ஸ் இதழில் வெளியான அறிக்கையில், “பரஸ்பர வரி என்ற பெயரில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு பொருளாதார மிரட்டல் விடுத்துள்ளது. தனது அதிகாரத்தை அமெரிக்கா துஷ்பிரயோகம் செய்கிறது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் சர்வதேச பொருளாதார விதிமுறைகளுக்கு எதிரானது. இது உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை சேதப்படுத்தும். சீனா நியாயத்தையும், தனது இறையான்மையையும் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு சீனா அடிபணியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    “சீனா மீது அமெரிக்கா விதித்த ‘பரஸ்பர வரிகள்’ என்று அழைக்கப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது, ஒருதலைப்பட்சமான கொடுமைப்படுத்தல் நடைமுறையாகும்.” என்று சீன வர்த்தக அமைச்சகம் கடுமையாக விமர்சித்துள்ளது.

    104% வரியை சந்திக்க நேரும்.. ட்ரம்ப் சீனப் பொருட்கள் மீதான தனது புதிய வரிகளை அமல்படுத்தினால், சீனப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் மொத்தம் 104% ஐ எட்டும். புதிய வரிகள், ஃபெண்டானில் கடத்தலுக்கான தண்டனையாக அறிவிக்கப்பட்ட 20% வரிகள், கடந்த வாரம் ட்ரம்ப் அறிவித்த தனி 34% வரிகள், மற்றும் தற்போது அறிவித்துள்ள 50% வரிக்கு வரி ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க நுகர்வோர் விலைவாசி உயர்வை சந்திக்கச் செய்யும். அதுமட்டுமல்லாமல், மற்ற நாடுகளை சீனா பிற வர்த்தக கூட்டாளர்களுடன், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆழமான வர்த்தக உறவுகளைத் தேடவும் ஊக்கமளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    வாட்ச்: தென்மேற்கு விமானத்தில் இருந்து பயணிகள் அகற்றப்பட்டனர், ‘பாதுகாப்புக் கவலை’ அட்லாண்டாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 8, 2026
    உலகம்

    காண்க: புதிய பாடிகேம் வீடியோ டெக்சாஸில் அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்றதில் ICE உரிமைகோரல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    மிச்சிகனில் இருந்து ஓக்லஹோமா வரை: 6 பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்கா முழுவதும் பயங்கர சூறாவளி வீசியதால் வீடுகள் அழிக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ‘ஆன்லைனில் பகிரப்பட்ட மைனர் பாதிக்கப்பட்டவர்களின் நிர்வாண படங்கள்’: பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வங்காளதேச மனிதரை எஃப்.பி.ஐ மலேசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வருகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஷில்பா சவுத்ரி: இந்திய வம்சாவளி அமெரிக்க ராணுவ வீரர் ஷில்பா சவுத்ரி விவாதத்தை கிளப்புகிறார்: ‘ஈரான் தலைவருக்காக இந்தியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?’ | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஹோலி கொண்டாட்டம் ஹாரோ: யுகே: ஹாரோவில் நடந்த ஹோலி நிகழ்வில் சண்டை மூண்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்திய தூதரகம், தோஹா: கத்தாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விமானம் ரத்து செய்யப்பட்ட பிறகு விவரங்களை பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிளாக்பிங்க் லிசாவின் ஜப்பான் வைரலான குரங்கு பஞ்ச் வருகை கே-பாப் ரசிகர்களிடமிருந்து ‘பெர்ஃப்ரோமேட்டிவ் ஆக்டிவிஸ்ட்’ பின்னடைவைத் தூண்டுகிறது: ‘பாலஸ்தீனத்தில் குழந்தைகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை’
    • “எனக்கு வேலை கிடைத்தவுடன், நான் ….”: ஒரு ஹைதராபாத் மனிதர் ஒரு கார்ப்பரேட்டில் 9-5 வேலை செய்யும் போது ஒரு பெரிய உணவு விநியோக வலையமைப்பை எவ்வாறு உருவாக்கினார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மும்பையின் சிறந்த 8 ஆடம்பரமான இடங்கள்
    • அகமதாபாத் காவல்துறையின் போக்குவரத்து ஆலோசனை: டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டிக்கான பாதைகள் நரேந்திர மோடி ஸ்டேடியம் அருகே திருப்பிவிடப்பட்டன; மாற்று சாலைகள் தெரியும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.