Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, March 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ட்ரோன் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை
    உலகம்

    ட்ரோன் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை

    adminBy adminMay 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ட்ரோன் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி கொடுத்த நிலையில், லாகூரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க துணைத் தூதரக ஊழியர்களுக்கு அந்நாடு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு அருகே தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் எல்லை கிராமத்தில் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல கிராமங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா சேதப்படுத்தியுள்ளது. இதனை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானும் இதனை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அலுவலகத்துக்கு விரைந்துள்ளார் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். பாகிஸ்தானில் இந்திய தாக்குதல் வலுத்துவரும் நிலையில் அங்கே அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தச் சூழலில் பாகிஸ்தானின் லாகூர் நகரிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வாழும் அமெரிக்கர்களுக்கு அந்நாடு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. லாகூர் பிரதானப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அந்த எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “ட்ரோன் தாக்குதல்கள் நடந்துள்ளதாலும், வான்வெளி ஊடுருவலுக்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாலும் லாகூரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் அனைவரும் பத்திரமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தாக்குதல் அச்சுறுத்தல் மிக்க பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என அந்த பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்தியத் தாக்குதலில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஈரான் போர்: ஏழாவது அமெரிக்க சேவை உறுப்பினர் சவுதி அரேபியாவில் காயமடைந்து இறந்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ‘குண்டை வீசியது யார் என்று சொல்ல மாட்டேன்’: இஸ்லாம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட பின்னர் லாரா லூமர் மம்தானியைத் தாக்குகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    சோர்ஃப்லி டேவியஸ் யார்? ஆபரேஷன் எபிக் ப்யூரியின் போது குவைத்தில் இறந்த NYPD அதிகாரி மற்றும் அமெரிக்க இராணுவ மேஜர் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 8, 2026
    உலகம்

    வாட்ச்: தென்மேற்கு விமானத்தில் இருந்து பயணிகள் அகற்றப்பட்டனர், ‘பாதுகாப்புக் கவலை’ அட்லாண்டாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 8, 2026
    உலகம்

    காண்க: புதிய பாடிகேம் வீடியோ டெக்சாஸில் அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்றதில் ICE உரிமைகோரல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    மிச்சிகனில் இருந்து ஓக்லஹோமா வரை: 6 பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்கா முழுவதும் பயங்கர சூறாவளி வீசியதால் வீடுகள் அழிக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வரையறுக்கப்பட்ட சேவைகள் தொடர்வதால் அபுதாபியிலிருந்து மார்ச் 10 விமான அட்டவணையை எத்திஹாட் புதுப்பிக்கிறது; நிலையை சரிபார்க்க பயணிகளுக்கு அறிவுறுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வினிகரில் பிளாஸ்டிக் கழிவுகள்: வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் சூரிய ஒளியை மட்டும் பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை வினிகராக மாற்றிய விஞ்ஞானிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • போர்ச்சுகலின் சாண்டா குரூஸ் கடற்கரையில் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன, அங்கு ஒரு ஜுராசிக் வேட்டையாடும் அவற்றை விட்டுச் சென்றது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விண்வெளியில் மிதக்கும் ‘பனிமனிதர்கள்’ விளக்கினார்: MSU மாணவர் ஒரு பில்லியன் ஆண்டுகள் பழமையான கைபர் பெல்ட் புதிரை தீர்க்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அனைவரின் பார்வையும் ஹர்திக் பாண்டியாவின் காதலி மீது! மஹிகா ஷர்மாவின் புதுப்பாணியான ‘பிளீட் ப்ளூ’ தோற்றம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நிகழ்ச்சியைத் திருடியது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.