இதனைத் தொடர்ந்து ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் புதிய பிரதமர் சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பதை ஜப்பான் ஆதரிப்பதாக சனே தகைச்சி கூறியதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் தனியாக அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது பேசிய தகைச்சி, “தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்வதில் அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். மேலும், மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சாதனையாகும்” என தெரிவித்துள்ளார்.

