Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, February 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: இன்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்
    உலகம்

    சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: இன்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்

    adminBy adminAugust 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: இன்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர் இன்று சந்தித்துப் பேசுகிறார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15-வது இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதன் பிறகு அவர் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்ய உடன்பாடு எட்டப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோவில் 16 ஜப்பானிய ஆளுநர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் டோக்கியோவில் இருந்து செண்டாய் நகருக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்தார். அவரோடு ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவும் சென்றார்.

    ஜப்பான் உதவியுடன் மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஜப்பான் சார்பில் 2 சின்கான்சென் ரக புல்லட் ரயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதன் சோதனை ஓட்டம் ஜப்பானின் செண்டாய் நகரில் நடைபெற்று வருகிறது. செண்டாய் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள புல்லட் ரயில்களை பார்வையிட்டார். மேலும் அங்கு பயிற்சி பெறும் இந்திய ஓட்டுநர்களிடம் அவர் கலந்துரையாடினார்.

    பின்னர் செண்டாய் நகரில் உள்ள டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த நிறுவனம் சார்பில் உத்தர பிரதேசத்தில் புதிதாக செமி கண்டக்டர் ஆலை அமைக்கப்பட உள்ளது.

    பின்னர் செண்டாயில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மதிய விருந்து வழங்கினார். அப்போது பிரதமர் இஷிபாவுக்கு சாப்ஸ்டிக்ஸுடன் கூடிய ராமன் கிண்ணங்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். மேலும் இஷிபாவின் மனைவி யோஷிகாவுக்கு பஷ்மினா சால்வையை அவர் பரிசாக அளித்தார்.

    ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க செண்டாய் நகரில் இருந்து சீனாவின் தியான்ஜின் நகருக்கு விமானத்தில் சென்றார். அங்குள்ள விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

    தற்போது எஸ்சிஓ அமைப்புக்கு சீனா தலைமையேற்று உள்ளது. இதன்படி எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசுகிறார். மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்களையும் அவர் தனித்தனியாக சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

    ஜெலன்ஸ்கி பேச்சு: சீனாவுக்கு பிரதமர் மோடி வந்துள்ள நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அவருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுக்கும் என்று ஜெலன் ஸ்கியிடம், பிரதமர் மோடி உறுதியளித்தார்.

    சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ள நிலையில், ஜெலன்ஸ்கி-மோடி தொலைபேசி பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    McCaughey septuplets: ஒன்றாகப் பிறந்த உலகின் முதல் ஏழு குழந்தைகள்; அவர்கள் இப்போது எங்கே? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 1, 2026
    உலகம்

    ஹாலிவுட்டில் இருந்து சிலிக்கான் பள்ளத்தாக்கு வரை: எப்படி ஆஷ்டன் குட்சர் ஒரு பில்லியன் டாலர் தொழில்நுட்ப முதலீட்டு சாம்ராஜ்யத்தை ரகசியமாக உருவாக்கினார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 31, 2026
    உலகம்

    லின்வே டிங் யார்? சீனாவிற்கான அமெரிக்க AI வர்த்தக ரகசியங்களை திருடியதற்காக முன்னாள் கூகுள் பொறியாளர் தண்டனை | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 31, 2026
    உலகம்

    இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது சொந்த உணவகத்திற்கு தீ வைத்ததற்காக இந்திய வம்சாவளி நபர் கனடாவில் கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 30, 2026
    உலகம்

    முதியவர்களைக் குறிவைத்து $55 மில்லியன் மோசடி: டெக்சாஸில் இரண்டு இந்திய நகைக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது, பாதிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தங்கம் வாங்கச் சொன்னார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 30, 2026
    உலகம்

    200,000 ரியல் எஸ்டேட் மோசடி செய்ததற்காக ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாவில் உள்ள இந்திய ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டார், வீடு வாங்குபவரை ஏமாற்ற சட்ட நிறுவனமாக ஆள்மாறாட்டம் செய்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    January 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆர்வத்தின் மூலை: உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் எந்த நாடு? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டைலா டு சப்ரினா கார்பென்டர்: கிராமி 2026 இல் சிறந்த ஆடை அணிந்த பிரபலங்கள், சாப்பிட்டுவிட்டு நொறுக்குத் தீனிகள் எதுவும் எடுக்கவில்லை
    • அன்றைய பெற்றோருக்குரிய மேற்கோள்: “பெற்றோராக இருப்பது எப்படி இருக்கும்: இது நீங்கள் செய்யக்கூடிய கடினமான காரியங்களில் ஒன்றாகும், ஆனால்…” – நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிளாக்பிங்கின் ரோஸ் ஒரு உன்னதமான கருப்பு மற்றும் வெள்ளை கவுனில் கிராமி வரலாற்றில் அடியெடுத்து வைத்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒரு திருப்பத்துடன் ‘பிரிட்ஜெர்டன்’ மூலம் ஈர்க்கப்பட்ட 8 பெண் குழந்தைகளின் பெயர்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.