Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, February 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»“சிக்கல்கள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சு இல்லை” – ட்ரம்ப் திட்டவட்டம்
    உலகம்

    “சிக்கல்கள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சு இல்லை” – ட்ரம்ப் திட்டவட்டம்

    adminBy adminAugust 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “சிக்கல்கள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சு இல்லை” – ட்ரம்ப் திட்டவட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜூலை 30 அன்று, டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை ட்ரம்ப் சந்தித்தார். அவரிடம், ‘50 சதவீத வரிவிதிப்புக்குப் பிறகு இந்தியாவுடனாக வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.

    முன்னதாக, இந்த விவகாரம் குறித்து டெல்லியில் பேசிய பிரதமர் மோடி, “விவசாயிகளின் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போரின் நலன்களில் மத்திய அரசு சமரசம் செய்துகொள்ளாது. அவர்களது நலனை ஒருபோதும் விட்டுத் தராது. இதற்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று மறைமுகமாக தெரிவித்தார்.

    உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிவிகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த 6 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அமெரிக்காவில் இருந்து பால், பாலாடை கட்டி, நெய் ஆகியவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்ய அந்த நாடு விரும்புகிறது. இது இந்திய விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்பதால் அமெரிக்க பால் பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

    இதேபோல, அமெரிக்காவில் இருந்து கோதுமை, சோயாபீன், சோளம், ஆப்பிள், திராட்சை, கொட்டை வகைகளை இந்தியாவில் விற்பனை செய்யவும் அந்த நாடு அனுமதி கோரி வருகிறது. அதோடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்களையும் இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்கா விரும்புகிறது. அதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

    மேலும், ‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது. அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யவேண்டும்’ என்றும் ட்ரம்ப் நிர்ப்பந்தம் செய்து வருகிறார். ஆனால், அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து கச்சாஎண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. இந்தச் சூழலில், இந்திய பொருட்களுக்கான வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரித்து ட்ரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பயத்திலிருந்து முதல் வீட்டிற்கு: இந்திய வம்சாவளி மருத்துவர் அமெரிக்காவில் தாயின் குடியேறிய வெற்றிப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    பொய்யான வால்மார்ட் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் வழக்குத் தாக்கல் செய்தார்: ‘என் வாழ்க்கையின் மிகப்பெரிய தலைவலி’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 11, 2026
    உலகம்

    ‘கோ பேக் டு இந்தியா’, ‘டை நாஜி’: மெல்போர்ன் அப்பா காரை சுத்தம் செய்யும் போது இனவெறிக் குறிப்புகளைக் கண்டார்; இத்தகைய தாக்குதல்களுக்கு எந்த காரணமும் இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 10, 2026
    உலகம்

    ‘நீங்கள் மருத்துவத்தில் தோல்வியடைந்தீர்கள், மனிதநேயம்’: எப்ஸ்டீனின் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மகளிர் மருத்துவ நிபுணர்களை இந்திய வம்சாவளி மருத்துவர் வெடிக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    பரபரப்பான டொராண்டோ மாலுக்கு வெளியே இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் கொல்லப்பட்டார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பற்றி காவல்துறைக்கு துப்பு இல்லை – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    உலகம்

    சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ரூ.2 லட்சம் அபராதம்; அவள் வேலையில்லாதவள், சமூக சேவை செய்வேன் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 6 வாஸ்து பரிந்துரைக்கப்பட்ட ஓவியங்கள் செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்க உங்கள் வீட்டில் இருக்க வேண்டும்
    • “ஜெனரல் இசட் சோம்பேறி இல்லை. அர்த்தமற்ற வாழ்க்கை அவர்களுக்கு ஒவ்வாமை”: ‘மம்மா சார்’ கர்னல் ராஜீவ் பர்வான் இன்றைய இளைஞர்களைப் பற்றி உண்மையாக கூறுகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குஜராத்தின் சூரத்தில் உள்ள 5 ரியல் எஸ்டேட் ஹாட்ஸ்பாட்கள் சொத்து தேவையை அதிகரிக்கின்றன
    • பயத்திலிருந்து முதல் வீட்டிற்கு: இந்திய வம்சாவளி மருத்துவர் அமெரிக்காவில் தாயின் குடியேறிய வெற்றிப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 5 தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு குடியிருப்பு கட்டிடத்திலும் இருக்க வேண்டும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.