Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, April 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்
    உலகம்

    சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்

    adminBy adminSeptember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சர்வதேச விமான நிலையம் மூடல்; உச்ச நீதிமன்ற விசாரணை ரத்து: ராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காத்மாண்டு: காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அதேபோல நேபாள உச்ச நீதிமன்றமும் தனது விசாரணைகளை காலவரையின்றி நிறுத்தியுள்ளது. மேலும் வன்முறைகள் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது.

    நேபாளத்தில் வெடித்த பயங்கர கலவரத்தை தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையத்தின் விமான சேவைகள் நேற்று பிற்பகல் முதல் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “தற்போதைய பாதகமான சூழ்நிலை, ராணுவக் கட்டுப்பாடு உத்தரவுகள் மற்றும் விமானப் பாதைகளில் ஏற்பட்டுள்ள புகை காரணமாக பாதுகாப்பு மீது கவலை எழுந்துள்ளதால், விமான நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

    தற்போதைய பதற்றமான சூழல் காரணமாக, நேபாள உச்ச நீதிமன்றம் அனைத்து விசாரணைகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது.

    செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறையில் உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து கோப்புகள், ஆவணங்கள் மற்றும் சேவையகங்கள் அழிக்கப்பட்டதாக தலைமை பதிவாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இதன் காரணமாக, புதன்கிழமை திட்டமிடப்பட்ட விசாரணைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், வியாழக்கிழமை முதல் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    போராட்டத்தின் பின்னணி: சமூக வலை​தளங்​களில் அண்​மை​யில் ‘‘நெப்போ பேபி’’ என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது நேபாளத்​தின் அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வந்​தனர். இதை பொதுமக்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இந்தச் சூழலில் பேஸ்​புக், யூ டியூப், எக்​ஸ், டெலிகி​ராம் உள்​ளிட்ட பதிவு செய்​யப்​ப​டாத 26 சமூக வலைதள கணக்​கு​களை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்​கியது. சீனா​வின் டிக்​டாக் செயலிக்கு மட்​டும் தடை விதிக்​கப்​பட​வில்​லை. இது, நேபாள இளம் தலை​முறை​யினரிடையே கொந்​தளிப்பை ஏற்​படுத்​தி​யது.

    கடந்த சில நாட்​களாக 28 வயதுக்கு உட்​பட்ட இளம் தலை​முறை​யினர் தலைநகர் காத்​மாண்​டு​வில் குவிந்து ஊழலுக்கு எதி​ராக பல்​வேறு போராட்​டங்​களில் ஈடு​பட்​டனர். அவர்​கள் நேற்று முன்​தினம் நாடாளு​மன்​றத்தை முற்​றுகை​யிட முயன்​றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்​டின் மீது கற்​களை எறிந்து தாக்​குதல் நடத்​தினர். இதன்​ காரண​மாக போராட்​டக்​காரர்​கள் மீது துப்​பாக்​கிச்​சூடு நடத்​தப்​பட்​டது. இதில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 400-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

    இதைத் தொடர்ந்து நேபாளம் முழு​வதும் வன்​முறை, கலவரம் வெடித்​தது. பல்​வேறு பகு​தி​களில் இருந்து தலைநகர் காத்​மாண்​டு​வில் பள்​ளி, கல்​லூரி மாணவ, மாண​வியர் பெரும் எண்​ணிக்​கை​யில் திரண்​டனர். காத்​மாண்​டு​வில் உள்ள அதிபர், பிரதமர், உள்​துறை அமைச்​சரின் மாளி​கைகளுக்கு போராட்​டக்​காரர்​கள் நேற்று தீ வைத்​தனர்.

    நாடாளு​மன்​றத்​தின் ஒரு பகு​திக்​கும் தீ வைக்​கப்​பட்​டது. பிரதமர் சர்மா ஒலி ஹெலி​காப்​டரில் பாது​காப்​பான இடத்​துக்கு தப்​பிச் சென்​றார். இந்தச் சூழலில் பிரதமர் சர்மா ஒலி நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்​தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் குல்தீப் சிங், இங்கிலாந்தின் ‘பணத்திற்காக பண மோசடி’ வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்; காப்பீட்டு மோசடியைத் திட்டமிடுவதற்கு கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றினார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 13, 2026
    உலகம்

    கொள்கை முதல் உள்கட்டமைப்பு வரை: நியூயார்க்கின் அதிகாரப் பட்டியலில் உள்ள இந்திய வம்சாவளி தலைவர்கள் யார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 13, 2026
    உலகம்

    ‘பிரண்டனின் மனைவி பாதி இந்தியராக இருந்தால் கவலை வேண்டாம்’: 7-லெவனில் இந்தியர்களை அழைத்த அமெரிக்க காங்கிரஸுக்கு இணையம் பதிலளிக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 13, 2026
    உலகம்

    ஆபிரகாம் லிங்கனின் அன்றைய மேற்கோள்: “பண்பு என்பது ஒரு மரம் போன்றது, மற்றும் புகழ் அதன் நிழல் போன்றது. நிழல் என்பது நாம் எதைப் பற்றி நினைக்கிறோமோ அதுதான் உண்மையான விஷயம்.” | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 12, 2026
    உலகம்

    ‘அது முடிந்துவிட்டது’: NYPD அதிகாரி ஜெரார்ட் கார்டரின் குடும்பம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் கொலையாளி இறந்ததால் மூடப்பட்டதைக் கண்டறிந்துள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 11, 2026
    உலகம்

    அமித் க்ஷத்ரியர் யார்? வரலாற்றுச் சிறப்புமிக்க மூன் பயணத்தின் பின்னணியில் இந்திய-அமெரிக்க நாசா அதிகாரி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கழுவுவதற்கு முன் கழிப்பறை மூடியை மூட வேண்டுமா: கழிப்பறை சுகாதாரத்தை பராமரிக்க சரியான வழி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கார் பேட்டரி அமிலத்தை சுத்தமான ஆற்றலாக மாற்றுதல்: பிளாஸ்டிக் மறுசுழற்சியில் ஒரு ஆச்சரியமான முன்னேற்றம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் குல்தீப் சிங், இங்கிலாந்தின் ‘பணத்திற்காக பண மோசடி’ வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்; காப்பீட்டு மோசடியைத் திட்டமிடுவதற்கு கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றினார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கோபத்தை நொடிகளில் நிறுத்தும் ‘ஜெசிகா’ தந்திரம்: இது உங்கள் குழந்தையை பயமுறுத்துகிறதா? ஜெசிகா பீல் வைரலான பெற்றோருக்குரிய போக்கில் என்ன தவறு மற்றும் அதற்கு பதிலாக பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • படித்த பிறகும் உங்கள் மனதில் இருக்கும் சிலிர்ப்பான விண்வெளி உண்மைகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.