Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, March 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது; மக்கள் போராட்டத்தால் பரபரப்பு
    உலகம்

    சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது; மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

    adminBy adminJune 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது; மக்கள் போராட்டத்தால் பரபரப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்நிலையில், அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

    இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    நடந்தது என்ன? அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம். இது அமெரிக்காவில் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், இந்த நகரில் சில இடங்களில் சோதனை மேற்கொண்டு சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளனர். அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு துறையின் விசாரணையில் 3 இடங்களில் மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சுமார் 7 இடங்களில் இந்த சோதனை நடந்ததாக புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவு அளிக்கும் குழுக்கள் தெரிவித்துள்ளன.

    இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. ‘கைது செய்தவர்களை விடுவிக்கவும். அவர்கள் இங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கவும்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் பணிபுரியும் வணிக நிறுவனங்களை டார்கெட் செய்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேயர் கண்டனம்: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், இந்த சோதனைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம் தரும் நகரத்தின் மேயராக இதை நான் சொல்கிறேன். நகரத்தின் வளர்ச்சி சார்ந்து பல்வேறு வழிகளில் பங்களிக்கும் புலம்பெயர்ந்தோர் மீதான இந்த நடவடிக்கையை கண்டு கோபமடைந்துள்ளேன். இது நமது சமூகத்தில் பயங்கரவாதத்தை விதைக்க வழிவகுக்கும். மேலும், நகரத்தின் பாதுகாப்பு கொள்கைகளை சீர்குலைக்கும் வகையில் உள்ளது” என அவர் கூறினார்.

    இருப்பினும் இந்த நடவடிக்கை நியாயமான ஒன்றுதான் என்றும். இதன் மூலம் சமூகத்துக்கு அச்சுறுத்தல் அளித்து வருபவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதாக குடியேற்ற அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

    அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்ட​விரோத​மாக​வும் குடியேறிய​வர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார் அதிபர் ட்ரம்ப். இது அவரது அரசு நிர்வாகத்தின் கொள்கை ரீதியான முடிவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஜார்ஜியா பள்ளி சண்டை கொடியதாக மாறியது: மற்றொரு மாணவனுடன் சண்டையிட்டு 12 வயது சிறுமி மரணம்; வீடியோவைப் பார்க்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    கண்ணீர், நிவாரணம் மற்றும் மீண்டும் இணைதல்: மரியாச்சி விளையாடும் டெக்சாஸ் சகோதரர்கள் ICE காவலில் பல வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    273 பேரைக் கொன்ற விமானம் 191 இன் கொடிய விபத்தைக் காட்டும் பத்து இரவுகள் குளிர்ச்சியான தரிசனங்களை மனிதன் கண்டான் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    ஜோஹ்ரான் மம்தானியின் மாளிகைக்கு வெளியே நடந்த இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் IED கள் வீசப்பட்ட பின்னர் 2 பென்சில்வேனியா பதின்ம வயதினரின் வீடுகளை FBI சோதனை செய்தது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ‘அவர் அவர்களை நேசித்தார்’: ஜார்ஜியா ஆசிரியரின் மனைவி, குறும்புத்தனத்தில் டிரக் மூலம் தாக்கப்பட்டார், மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    உலகம்

    ‘H1B விசாக்கள் காரணமாக’: Forsyth கவுண்டியில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் ஆதிக்கம் செலுத்தும் 35,000 இந்திய-அமெரிக்கர்கள் மீது MAGA கோபமடைந்தது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 8 சின்னச் சின்ன கட்டிடங்கள் மற்றும் அவற்றை உருவாக்கிய பிரபல கட்டிடக் கலைஞர்களின் பெயர்கள்
    • அருண் டுபே மரணச் செய்தி: அருண் டுபே யார்? பிரபல மகாராஷ்டிரா ரீல் ஸ்டார் ‘கோன்_அருந்துபே’ வீட்டில் இறந்து கிடந்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரபஞ்சத்தின் மிகப்பெரிய 3D வரைபடம் பல பில்லியன் ஆண்டுகளாக மறைந்திருக்கும் விண்மீன் திரள்களை வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெவோன் தீவின் ரகசியம்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா இந்த கனடிய தீவை ஏன் பயன்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிறந்த வேலை மற்றும் அதிகரிப்பு வேண்டுமா? வேலையில் பதவி உயர்வு பெற 5 வழிகள் – மற்றும் ‘உலர் பதவி உயர்வை’ தவிர்ப்பது எப்படி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.