வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப் பிய யூனியன் 3.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ 31,000 கோடி) அபராதம் விதித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமானகூகுள் வர்த்தக போட்டிக்கான சட்டங் களை மீறி செயல்பட்டதாக கூறி அந்த நிறுவனத்துக்கு 3.5 பில் லியன் டாலர் அபராதத்தை ஐரோப் பிய யூனியன் விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை தளத்தில் கூறியுள்ளதாவது: ஐரோப்பா இன்று அமெரிக்காவின் மற்றொரு மிகச்சிறந்த நிறு வனமான கூகுளுக்கு 3.5 பில் லியன் டாலர் அபராதம் விதித்து அதன் மீது தாக்குதல் நடத்தியுள் ளது. இது மிகவும் நியாயமற்றது. அமெரிக்காவில் வரி செலுத்து வோர் ஒவ்வொருவரும் ஐரோப் பிய யூனியனின் இந்த நடவடிக் கையை ஆதரிக்க மாட்டார்கள். எனது நிர்வாகம் முன்பு கூறியது போல இதுபோன்ற பாரபட்சமான செயல்களை நிலைநிறுத்த ஒரு போதும் அனுமதிக்காது. இந்த அபராதத்தை திரும்பப் பெறா விட்டால் வரிகள் மூலம் பதிலடி தரப்படும்.
இதேபோன்றதான் ஆப்பிள் நிறுவனமும் 17 பில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்னைப் பொருத்தவரை அந்த அபராதம் வசூலிக்கப்படக் கூடாதது. அவர் கள் தங்களது பணத்தைத் திரும் பப் பெற இதுபோன்ற நடவடிக்கை களில் ஈடுபடுகின்றனர். இதனை நாம் அனுமதிக்கமுடியாது. அப்படி நடந்தால், வரி செலுத்தும் அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்ய பிரிவு 301 நடவடிக்கையைத் தொடங்கவேண்டிய கட்டாயத் துக்கு தள்ளப்படுவேன்.இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓ-க்களை வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் அண்மை யில் சந்தித்தார். இந்த நிலையில், கூகுளுக்கு ஆதரவாக ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அபராதம் ஏன்?- கூகுள் தனது அளவு மற்றும் ஆதிக்கத்தை பயன்படுத்தி காட்சி விளம்பர வணிகத்தைக் கட்டுப் படுத்துவதன் மூலம் சட்டங்களை மீறி செயல்பட்டுள்ளது. மேலும், கூகுள் விளம்பர தொழில்நுட்பத் தின் போட்டியாளர்களுக்கு மறை முகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள் ளது. இதனால் கூகுளுக்கு அபரா தத்தை 27 நாடுகளின் கூட்டமைப் பான ஐரோப்பிய யூனியன் விதித் துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.