ஒட்டாவா: காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் அமெரிக்காவில் ‘சீக்கியர்களுக்கான நீதி’ (எஸ்எப்ஜே) என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இதன் கனடா நிர்வாகியாக இந்திரஜித் சிங் கோசல் (36) செயல்பட்டு வந்தார்.
குர்பத்வந்த் சிங் பன்னுனின் வலதுகரமாக கருதப்படும் அவரை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் இந்து கோயிலில், பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, இந்திரஜித் சிங் கோசல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

