Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, February 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»காசாவில் 14,000 குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தா? – மக்கள் உணவின்றி பரிதவிப்பு!
    உலகம்

    காசாவில் 14,000 குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தா? – மக்கள் உணவின்றி பரிதவிப்பு!

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காசாவில் 14,000 குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தா? – மக்கள் உணவின்றி பரிதவிப்பு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காசா: பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் உதவிகள் வரத் தொடங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில், தேவைப்படும் புதிய பொருள்கள் இன்னும் மக்களைச் சென்று சேரவில்லை என்றும், மூன்று மாதங்களாக இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் காசாவில், சுமார் 20 லட்சம் மக்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கிறார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    ஹமாஸ்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக காசாவுக்குள் உணவு, மருந்து பொருள்கள் மற்றும் எரி பொருள்கள் செல்லுவதை இஸ்ரேல் தடுத்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் குறைந்த அளவு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளித்தது. உதவிகள் காசாவுக்குள் நுழையத் தொடங்கி இருக்கும் நிலையில், இஸ்ரேல் படைகளின் கெடுபிடிகளால் புதிய பொருள்கள் தேவைப்படும் மக்களைச் சென்று சேர்வதில் சிக்கல் நீடிப்பதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    14,000 குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்தா? – இதனிடையே, காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் மனிதாபிமான உதவிகள் சென்று சேராவிட்டால், 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா செயலாளர் டாம் பிளெட்சர் நேற்று சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், “உதவிகளுடன் நாம் அவர்களிடம் சென்று சேராவிட்டால் அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்” என்று கூறியிருந்தார்.

    பிளெட்சரின் இந்த அறிக்கை விவாதத்தை கிளப்பியிருக்கும் நிலையில், அது பாலஸ்தீனியர்கள் எதிர்கொண்டுவரும் மனிதாபிமான பேரழிவை அடிக்கோடிட்டு காட்டுவதையே நோக்கமாக கொண்டது என்றே கூறப்படுகிறது. என்றாலும், உற்று நோக்கினால் இந்த எண்ணிக்கை உடனடி இறப்பு என்பதைத் தாண்டி, நீண்டகால கணிப்பை அடிப்படையாக கொண்டது என்றும் கூறப்படுகிறது.

    எங்கள் குழந்தைகள் மெதுவாகச் சாகிறார்கள்: நான்கு குழந்தைகளின் தந்தையான மஹ்முத் அல் ஹாவ் சக பாலஸ்தீனயர்களைப் போலவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவின் சூப் கிச்சன் முன்பாக காத்துக் கிடக்கிறார். அங்கிருக்கும் அண்டாவை முன்னும் பின்னும் ஆட்டி தனது குழந்தைகளுக்காக சூப் எடுக்க முயற்சிக்கிறார். ஹாவ் இதனைத் தினமும் செய்கிறார். ஏனெனில் தனது குழந்தைகளுக்கு போதுமான அளவு உணவு கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவரிடம் உள்ளது.

    வடக்கு காசாவின் இடிபாடுகளுக்கு இடையே உணவு தேடி அலைகிறார். ஆறுமணி நேரம் காத்திருந்தும் தனது குடும்பத்தினருக்கு போதுமான உணவை திரட்ட அவரால் முடியவில்லை. “எனக்கு நோய்வாய்ப்பட்ட ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு என்னால் எதுவும் கொடுக்க முடியவில்லை. அங்கு பிரெட் இல்லை,எதுவுமே இல்லை. எல்லோரும் எங்களுடன் நிற்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்களுடைய குழந்தைகள் மெதுவாக இறந்து கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் வேதனையாக. இது காசாவின் சூடும் நிஜத்தின் ஒரு நிதர்சனம்.

    மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் – போப் லியோ: இதனிடையே, பாலஸ்தீனப் பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று புதிய போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பாலஸ்தீனப் பகுதியில் உள்ள நிலைமை இன்னும் கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

    புனித பீட்டர் சதுக்கத்தில் தனது முதல் வாராந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய போப், “நியாயமான மனிதாபிமான உதவிகள் நுழைவதை அனுமதிக்கவும், இந்த விரோதப்போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்குமான எனது கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்தப் பேரழிவின் விலையை குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    நியூ ஜெர்சியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர், போலீஸ் துரத்தலில் இருந்து தப்பித்ததைப் பற்றி பெருமையாகப் பேசுவதற்காக போலீஸை அழைக்கிறார், கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 4, 2026
    உலகம்

    ‘பஞ்சாபி டெவில்ஸ்’ பைக் கும்பல் நிறுவனர் ஜஷன்ப்ரீத் அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    உலகம்

    ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ‘ரகசிய மகன்’ இருக்கிறாரா? வெடிக்கும் DOJ மின்னஞ்சல்கள் அவர் ‘ஆண் குழந்தைக்காக’ வாழ்த்தப்பட்டதைக் காட்டுகின்றன | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    உலகம்

    வினோதமான ‘ஹாட்னஸ் தரவரிசை’ கோரிக்கைகளை முன்னாள் ஊழியர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து GOP பிரதிநிதி நான்சி மேஸ் தீக்குளித்தார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 3, 2026
    உலகம்

    ‘நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?’: இந்திய வம்சாவளி இனப் பாகுபாடு ஆணையர் ஆஸ்திரேலியாவை ‘திருடப்பட்ட நிலம்’ என்று அழைத்தார், பின்னடைவை எதிர்கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 2, 2026
    உலகம்

    ட்ரெவர் நோவா கிராமி மேடையில் உள் வர்த்தகத்தை ஒப்புக்கொண்டாரா? ‘உருளைக்கிழங்கு’ ஜோக் விளக்கப்பட்டது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    February 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 2025 ஆம் ஆண்டில் நவநாகரீகமான, அழகான மற்றும் சிக்கலான குழந்தைப் பெயர்களை பெற்றோர்கள் ஏன் விட்டுவிடுகிறார்கள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் இந்திய நாட்டினருக்கான ஜப்பான் பல நுழைவு விசா: தகுதி, ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறை விளக்கப்பட்டது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 6,000 அடி உயரத்தில் உள்ள மயில்கள் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து கவலை தெரிவிக்கின்றன இந்தியா செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “பணியாளர்கள் எங்களிடம் கலந்துகொள்ள தயங்கினார்கள் …”: வெளிநாட்டில் வசித்த பிறகு, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை விட இந்தியா ஏன் சிறந்த தேர்வாக இருக்கிறது என்பதை இந்த நிபுணர் விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நியூ ஜெர்சியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர், போலீஸ் துரத்தலில் இருந்து தப்பித்ததைப் பற்றி பெருமையாகப் பேசுவதற்காக போலீஸை அழைக்கிறார், கைது செய்யப்பட்டார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.