Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, March 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»கரோனாவைவிட மோசமான கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா: மூத்த அரசியல் விமர்சகர் எச்சரிக்கை
    உலகம்

    கரோனாவைவிட மோசமான கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா: மூத்த அரசியல் விமர்சகர் எச்சரிக்கை

    adminBy adminJune 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரோனாவைவிட மோசமான கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா: மூத்த அரசியல் விமர்சகர் எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. உடனடியாக சீனாவுடனான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் வலியுறுத்தி உள்ளார்.

    அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த பெண் ஆய்வாளர் யுன்கிங் ஜியான் (33) பணியாற்றி வருகிறார். அவரும் அவரது காதலர் ஜுன்யாங் லியூவும் சீனாவில் இருந்து ஒரு வகை பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து சீன வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் கூறியதாவது: கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, நெல் உள்ளிட்ட தானியங்களை அழிக்கும் தன்மை கொண்டது. அதோடு கால்நடைகள், மனிதர்களுக்கும் பூஞ்சை பரவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பூஞ்சையால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்.

    கைது செய்யப்பட்ட யுன்கிங் ஜியான், ஜுன்யாங் லியூ ஆகியோர் சீனாவில் ஆட்சி நடத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் மிக நெருங்கிய தொடர்பு உடையவர்கள். சீன அரசின் சதித் திட்டத்தின்படி இருவரும் அமெரிக்காவுக்குள் கொடிய பூஞ்சையை கடத்தி உள்ளனர்.

    சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரப்பப்பட்டது. அடுத்த கட்டமாக பூஞ்சை தாக்குதலை நடத்த சீனா திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவை குறிவைத்து அந்த நாடு செயல்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் எப்போதும் போர் குறித்தே பேசுகிறார். சீன மக்கள் போருக்கு தயார் நிலையில் இருக்குமாறு அவர் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்.

    இதுகுறித்து அமெரிக்க அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த 2020-ம் ஆண்டில் சீனாவில் இருந்து அமெரிக்காவின் 50 மாகாணங்களில் விதைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அந்த விதைகள் நச்சுதன்மை கொண்டவை. அமெரிக்காவின் வேளாண்மையை அழிக்க சீனா ரகசியாக சதி செய்கிறது. எனவே சீனாவுடனான உறவை அமெரிக்க அரசு உடனடியாக முறித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த 2023-ம் ஆண்டில் கேனடிடா ஆரிஸ் என்ற பூஞ்சை மனிதர்களிடம் பரவுவது கண்டறியப்பட்டது. இந்த பூஞ்சை தற்போது அமெரிக்காவில் அதிதீவிரமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் 38 மாகாணங்களில் கேனடிடா ஆரிஸ் பூஞ்சை பாதிப்பு காணப்படுகிறது.

    இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறும்போது, “அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் பூஞ்சையால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் பூஞ்சை பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நவேடா, புளோரிடா மாகாணங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. வாஷிங்டன் உள்ளிட்ட 12 மாகாணங்கள் மட்டுமே பூஞ்சை பாதிப்பில் இருந்து தப்பி உள்ளன. அந்த மாகாணங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தன.

    கேனடிடா ஆரிஸ் பூஞ்சை பரவல் பின்னணியில் சீனா இருக்கக்கூடும் என்று ஒருதரப்பினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதுகுறித்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பென்சில்வேனியாவில் ஹெச்-1பி விசா மோசடி, ஹெல்த்கேர் ஊழல் போன்றவற்றில் தண்டனை பெற்ற காஷ் படேலைச் சந்தித்ததைப் பற்றி தற்பெருமை காட்டிய இந்திய வம்சாவளி சகோதரர்கள்; 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    இங்கிலாந்தின் வெம்ப்லியில் உள்ள இந்திய கடைகள், உணவகங்கள் இலக்கு தாக்குதல்களில் நாசமாக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    அன்னா லீ வாட்டர்ஸ் யார்? 19 வயதான பிக்கிள்பால் நட்சத்திரம் அடுத்த மாதம் சர்வதேச அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ‘இந்து விரோதிகளை புண்படுத்த வேண்டாம்’: இந்திய வம்சாவளி பிராண்ட் லட்சுமி சிலையை பேக்கேஜிங்கில் இருந்து அகற்றியது, ஆன்லைனில் பெரும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ஜார்ஜியா பள்ளி சண்டை கொடியதாக மாறியது: மற்றொரு மாணவனுடன் சண்டையிட்டு 12 வயது சிறுமி மரணம்; வீடியோவைப் பார்க்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    கண்ணீர், நிவாரணம் மற்றும் மீண்டும் இணைதல்: மரியாச்சி விளையாடும் டெக்சாஸ் சகோதரர்கள் ICE காவலில் பல வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிவப்பு நிற சந்தேரி புடவை, ராயல் பந்த்காலா மற்றும் மும்பை சூரிய அஸ்தமனம்: கிருத்திகா கம்ரா-கௌரவ் கபூரின் நெருக்கமான பாந்த்ரா வீட்டு திருமணத்தின் படங்கள்
    • ‘சீன இளவரசி’ ஜாங் ஜிங்கி சிவப்பு கம்பளத்தின் மீது ‘குப்பைப் பையை’ ஏந்தி இணையத்தை திகைக்க வைத்தபோது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • யாஸ் ராணி: நீருக்கடியில் பம்பல் எப்படி உயிருடன் இருக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாரிஸ் ஃபேஷன் வீக்: பாரிஸ் பேஷன் வீக்கில் டாம் ஹாலண்டுடனான தனது ரகசிய திருமணத்தைப் பற்றி ஜெண்டயா சுட்டிக்காட்டினாரா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வரலாற்றில் முதல் தொலைபேசி அழைப்பு: அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் ஒன்பது வார்த்தைகள் தகவல்தொடர்புகளை மாற்றியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.