நாம்பென்: கம்போடியாவில் சைபர் மோசடி தொடர்பாக 15 நாட்களில் 138 இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில், 105 இந்தியர்களும், 606 பெண்களும் அடங்குவர்.
இந்தியர் களைத் தவிர, 1,028 சீன குடிமக்கள், 693 வியட்நாமியர்கள், 366 இந்தோனேசியர்கள், 101 வங்கதேசத்தவர், 31 பாகிஸ்தானியர்களும். 82 தாய்லாந்து நாட்டவரும் கைதாகியுள்ளனர்.
இந்த சோதனைகளின் போது கணினிகள், மடிக்கணினிகள், மொபைல் போன்கள். இந்திய மற்றும் சீன காவல் துறையினரின் போலி சீருடைகள், போதைப்பொருள் பதப்படுத்தும் உபகரணங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், எக்ஸ்டசி பவுடர் மற்றும் பிற போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இந்தியர்களை அழைத்து வருவது குறித்து மத்திய அரசு கம்போடியா அதிகாரிகளுடன் பேச்சுவார்தை நடத்தி வருகிறது. கம்போடியா போன்ற வெளிநாடுகளில் சைபர் மோசடியில் ஈடுபட்டு தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.