Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, March 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி: மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    உலகம்

    கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி: மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி: மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா – கனடா இடையே பாதிப்படைத்திருந்த உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அங்குள்ள இந்திய தூதர் மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது, கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இருநாட்டு தூதரங்களிலும், ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

    இந்நிலையில் கனடா பிரதமராக இருந்து ட்ரூடா உட்கட்சி பூசல் காரணமாக கடந்த மாதம் பதவி விலகினார். இது லிபரல் கட்சிக்கு மார்க் கார்னே தலைமை ஏற்க வழிவகுத்தது. பொது தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று, பிரதமரானால், இந்தியா – கனடா இடையேயான உறவை மேம்படுத்துவேன் என மார்க் கார்னே ஏற்கெனவே கூறியிருந்தார். அதேபோல் பொது தேர்தலில் லிபரல் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. மார்க் கார்னே புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

    இந்நிலையில் மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

    கனடாவின் பிரதமராக நீங்கள் (மார்க் கார்னே) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், லிபரல் கட்சி வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. நமது கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நமது மக்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம் இரு நாட்ட உறவுகள் மீண்டும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காலிஸ்தான் ஆதரவு கட்சி தோல்வி: கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் செல்வாக்குடன் இருந்த காலிஸ்தான் ஆதரவு கட்சியான புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் இந்த தேர்தலில் படு தோல்வியடைந்து 3-ம் இடத்தை பிடித்தார். அவரது கட்சியும் படுதோல்வியடைந்து ஒற்றை இலக்க இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால் இக்கட்சியின் ஆதரவை பெற கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னே விரும்ப மாட்டார் என கூறப்படுகிறது. புதிய ஜனநாயக கட்சியின் படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் பதவி விலகியுள்ளார். இதன் மூலம் கனடாவில் காலிஸ்தான் கொள்கையை அங்குள்ள மக்கள் நிராகரித்துள்ளது தெரிகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    வாட்ச்: தென்மேற்கு விமானத்தில் இருந்து பயணிகள் அகற்றப்பட்டனர், ‘பாதுகாப்புக் கவலை’ அட்லாண்டாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 8, 2026
    உலகம்

    காண்க: புதிய பாடிகேம் வீடியோ டெக்சாஸில் அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்றதில் ICE உரிமைகோரல்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    மிச்சிகனில் இருந்து ஓக்லஹோமா வரை: 6 பேர் கொல்லப்பட்டனர், அமெரிக்கா முழுவதும் பயங்கர சூறாவளி வீசியதால் வீடுகள் அழிக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ‘ஆன்லைனில் பகிரப்பட்ட மைனர் பாதிக்கப்பட்டவர்களின் நிர்வாண படங்கள்’: பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வங்காளதேச மனிதரை எஃப்.பி.ஐ மலேசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வருகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஷில்பா சவுத்ரி: இந்திய வம்சாவளி அமெரிக்க ராணுவ வீரர் ஷில்பா சவுத்ரி விவாதத்தை கிளப்புகிறார்: ‘ஈரான் தலைவருக்காக இந்தியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?’ | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஹோலி கொண்டாட்டம் ஹாரோ: யுகே: ஹாரோவில் நடந்த ஹோலி நிகழ்வில் சண்டை மூண்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்திய தூதரகம், தோஹா: கத்தாரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விமானம் ரத்து செய்யப்பட்ட பிறகு விவரங்களை பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிளாக்பிங்க் லிசாவின் ஜப்பான் வைரலான குரங்கு பஞ்ச் வருகை கே-பாப் ரசிகர்களிடமிருந்து ‘பெர்ஃப்ரோமேட்டிவ் ஆக்டிவிஸ்ட்’ பின்னடைவைத் தூண்டுகிறது: ‘பாலஸ்தீனத்தில் குழந்தைகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை’
    • “எனக்கு வேலை கிடைத்தவுடன், நான் ….”: ஒரு ஹைதராபாத் மனிதர் ஒரு கார்ப்பரேட்டில் 9-5 வேலை செய்யும் போது ஒரு பெரிய உணவு விநியோக வலையமைப்பை எவ்வாறு உருவாக்கினார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் மும்பையின் சிறந்த 8 ஆடம்பரமான இடங்கள்
    • அகமதாபாத் காவல்துறையின் போக்குவரத்து ஆலோசனை: டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டிக்கான பாதைகள் நரேந்திர மோடி ஸ்டேடியம் அருகே திருப்பிவிடப்பட்டன; மாற்று சாலைகள் தெரியும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.