Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, March 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஒரே இரவில் 367 ட்ரோன்களை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா – 13 பேர் உயிரிழப்பு! 
    உலகம்

    ஒரே இரவில் 367 ட்ரோன்களை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா – 13 பேர் உயிரிழப்பு! 

    adminBy adminMay 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒரே இரவில் 367 ட்ரோன்களை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா – 13 பேர் உயிரிழப்பு! 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கீவ்: ஒரே இரவில் 367 ட்ரோன்களை ஏவி உக்ரைன் முழுவதும் மிகப்பெரிய வான்வழித்தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போரில் நடந்திருக்கும் மிகப்பெரிய வான்வழித்தாக்குதல் இதுவாகும்.

    ரஷ்யாவின் வான்வழித்தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கீவ், கார்கிவ், மைக்கோலைவ், டெர்னோபில் மற்றும் கிமெல்னிட்ஸ்கி என பரவலான அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனிடையே உக்ரைன் விமானப்படை 267 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. என்றாலும், உக்ரைனுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட உள்கட்டமைப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    கீவ்வில் 11 பேர் காயமடைந்துள்ளனர், கிமெல்னிட்ஸ்கி-ல் நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கிவ்-ஐ குறிவைத்து வெள்ளிக்கிழமை நடந்த ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த வான்வெளித்தாக்குதல் நடந்துள்ளது.

    தெற்கு உக்ரைனின் மைக்கோலைவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 77 வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார். ஐந்து பேர் காயமடைந்தனர் என்று பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஒரு அப்பார்ட்மெண்ட் தாக்கப்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையின் கீழான அமெரிக்காவின் மவுனத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக வலுவான தடைகள் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “அமெரிக்காவின் மவுனமும், உலகின் பிற நாடுகளின் மவுனமும் மட்டுமே புதினை ஊக்குவிக்கின்றது. இதுபோன்ற ரஷ்யாவின் ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலும், ரஷ்யா மீதான பொருளாதாரத்தடைக்கான போதுமான காரணங்களே.” என்று தெரிவித்தார்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மர் கூறுகையில், “அழுத்தம் இல்லாமல் இங்கே எதுவும் மாறாது. ரஷ்யாவும் அதன் நட்பு நாடுகளும் மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற மரணங்களை நிகழ்த்தவே படைகளை உருவாக்கும். ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறன் இருக்கும் வரை ரஷ்யா தொடர்ந்து போராடும்” என்று தெரிவித்தார்.

    மறுபுறம், 95 உக்ரைனிய ட்ரோன்களை தாக்கி அழித்ததாகவும், அவைகளில் 12 ட்ரோன்கள் மாஸ்கோ அருகே இடைமறிக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் வழியுறுத்தி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கைதிகள் பறிமாற்றம் குறித்து முடிவுக்கு வந்த இரு தரப்பினரும், தலா 1000 பேரை பறிமாற்றிக்கொண்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ரிஷி கபூர் குற்றஞ்சாட்டப்பட்டார்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பர் ரிஷி கபூர், மியாமியில் 68-அடி சொகுசு படகு வாங்குவதற்காக $85 மில்லியன் மோசடித் திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 14, 2026
    உலகம்

    ‘ஊழல், ஆபத்தான நிர்வாகம்’: டிரம்பின் மதக் குழுவில் உள்ள ஒரே முஸ்லிம் பெண் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 13, 2026
    உலகம்

    இந்திய வம்சாவளி அதிகாரிகள்: “முழுமையாக இந்தியர்களால் நடத்தப்படுகிறதா?”: கனேடிய தலைவர் அரசாங்க நிறுவனத்தில் இந்திய வம்சாவளி உறுப்பினர்களை அழைத்ததற்காக பின்னடைவை எதிர்கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 12, 2026
    உலகம்

    பென்சில்வேனியாவில் ஹெச்-1பி விசா மோசடி, ஹெல்த்கேர் ஊழல் போன்றவற்றில் தண்டனை பெற்ற காஷ் படேலைச் சந்தித்ததைப் பற்றி தற்பெருமை காட்டிய இந்திய வம்சாவளி சகோதரர்கள்; 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    இங்கிலாந்தின் வெம்ப்லியில் உள்ள இந்திய கடைகள், உணவகங்கள் இலக்கு தாக்குதல்களில் நாசமாக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    அன்னா லீ வாட்டர்ஸ் யார்? 19 வயதான பிக்கிள்பால் நட்சத்திரம் அடுத்த மாதம் சர்வதேச அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இண்டிகோ விமான எரிபொருள் விலை உயர்வுக்கு மத்தியில் மார்ச் 14 முதல் எரிபொருள் கட்டணத்தை அறிமுகப்படுத்துகிறது; பயணிகளுக்கு என்ன அர்த்தம் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • படிப்பை விட BTS முக்கியமா? நெட்ஃபிளிக்ஸில் ARIRANG நேரலை கச்சேரியைப் பார்க்க, தேசி ராணுவத்தினர் வெகுஜனப் பங்கை திட்டமிடுவதால், இந்திய ஆசிரியர் பெற்றோரை எச்சரித்தார்
    • கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் சென்னையில் உள்ள வீடு சுத்த அழகு! இது அவரது ஆழமான குடும்ப வேர்களையும் தென்னிந்திய மரபுகளையும் பிரதிபலிக்கிறது
    • UAE பயண அறிவிப்பு: DXB ஃப்ளையர்களுக்கான சமீபத்திய வழிகாட்டுதலை வழங்கிய 9 முக்கிய விமான நிறுவனங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நல்ல வேலை-வாழ்க்கை சமநிலையுடன் 5 நாடுகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.