Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, March 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»“ஏவுகணைகள், குண்டுகளை கண்டு பயந்து போனோம்” – ஈரானில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் அனுபவ பகிர்வு
    உலகம்

    “ஏவுகணைகள், குண்டுகளை கண்டு பயந்து போனோம்” – ஈரானில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் அனுபவ பகிர்வு

    adminBy adminJune 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “ஏவுகணைகள், குண்டுகளை கண்டு பயந்து போனோம்” – ஈரானில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் அனுபவ பகிர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: “எங்களைச் சுற்றி ஏவுகணைகளும், குண்டுகளும் விழுவதைக் கண்டு பயந்துபோனோம். அந்த நாட்களை மீண்டும் ஒருபோதும் பார்க்க மாட்டோம் என நம்புகிறேன்” என்று ஈரானிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து ஆர்மீனியா நாட்டுக்கு தரைவழியாக அழைத்துவரப்பட்ட 110 இந்திய மாணவர்கள் இன்று (ஜூன் 19) அதிகாலையில் விமானம் மூலம் டெல்லியை அடைந்தனர்.

    ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பாதி பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர். ஈரானின் வான்வெளி மூடப்பட்டதால் இவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் அர்மீனியா வழியாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    ‘ஆபரேஷன் சிந்து’ என்றால் என்ன? – ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ‘ஆபரேஷன் சிந்து’ திட்டத்தின் மூலம் இந்திய அரசாங்கம் ஈரானின் உர்மியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 110 மாணவர்களை வெளியேற்றி, கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்மீனியாவுக்கு அனுப்பி வைத்தது.

    அதைத் தொடர்ந்து அவர்கள் இன்று டெல்லி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். இந்த விமானத்தில் வந்த 94 மாணவர்கள் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

    இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய தூதரகம் செய்த ஏற்பாடுகள் மூலம் தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நகரத்திலிருந்து அர்மீனியாவுக்கு வெளியேற்றப்பட்டனர். தனியாக வாகனங்கள் வைத்துள்ள மற்ற இந்தியர்களும் தெஹ்ரான் நகரத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தனித்தனியாக, சில இந்தியர்கள் ஆர்மீனியாவின் எல்லை வழியாக ஈரானை விட்டு வெளியேற வசதி செய்யப்பட்டுள்ளது. நிலையற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மேலும் சில ஆலோசனைகளை வழங்குவோம்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மாணவர்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம், ‘உர்மியா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 110 இந்திய மாணவர்கள், அவர்களில் 90 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள், ஆர்மீனியாவிற்குள் பாதுகாப்பாக எல்லையைக் கடந்து டெல்லி வந்தனர். மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியை செய்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் நன்றி தெரிவிக்கிறது. மீதமுள்ள அனைத்து மாணவர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

    ஈரானில் எம்பிபிஎஸ் மாணவரான 21 வயது மாஸ் ஹைதரின் தந்தை ஹைதர் அலி, மீட்பு முயற்சிகளுக்கு இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.”நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். இதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் தெஹ்ரானில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் மீட்கப்படாதது எங்களுக்கு வருத்தமாக உள்ளது” என்றார்

    டெல்லியில் தரையிறங்கிய எம்பிபிஎஸ் மாணவர் மிர் கலீஃப், “எங்களால் பல ஏவுகணைகளைப் பார்க்க முடிந்தது. ஒரு போர் நடந்து கொண்டிருந்தது. எங்கள் சுற்றுப்புறத்தில் குண்டுவீசப்பட்டது. நிலைமையைக் கண்டு நாங்கள் மிகவும் பயந்தோம். அந்த நாட்களை மீண்டும் ஒருபோதும் பார்க்க மாட்டோம் என நம்புகிறேன்.” என்று நம்புகிறேன்.

    ஈரானில் இன்னும் மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். அவர்கள் விரைவில் இந்தியாவிற்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ‘ஊழல், ஆபத்தான நிர்வாகம்’: டிரம்பின் மதக் குழுவில் உள்ள ஒரே முஸ்லிம் பெண் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 13, 2026
    உலகம்

    இந்திய வம்சாவளி அதிகாரிகள்: “முழுமையாக இந்தியர்களால் நடத்தப்படுகிறதா?”: கனேடிய தலைவர் அரசாங்க நிறுவனத்தில் இந்திய வம்சாவளி உறுப்பினர்களை அழைத்ததற்காக பின்னடைவை எதிர்கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 12, 2026
    உலகம்

    பென்சில்வேனியாவில் ஹெச்-1பி விசா மோசடி, ஹெல்த்கேர் ஊழல் போன்றவற்றில் தண்டனை பெற்ற காஷ் படேலைச் சந்தித்ததைப் பற்றி தற்பெருமை காட்டிய இந்திய வம்சாவளி சகோதரர்கள்; 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    இங்கிலாந்தின் வெம்ப்லியில் உள்ள இந்திய கடைகள், உணவகங்கள் இலக்கு தாக்குதல்களில் நாசமாக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    அன்னா லீ வாட்டர்ஸ் யார்? 19 வயதான பிக்கிள்பால் நட்சத்திரம் அடுத்த மாதம் சர்வதேச அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ‘இந்து விரோதிகளை புண்படுத்த வேண்டாம்’: இந்திய வம்சாவளி பிராண்ட் லட்சுமி சிலையை பேக்கேஜிங்கில் இருந்து அகற்றியது, ஆன்லைனில் பெரும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அஸ்ஸாம் தனது சொந்த அறிவியல் நகரத்தைப் பெறுகிறது, கொல்கத்தாவை விட பெரியது, விண்வெளி மற்றும் யுரேகா கேலரிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அர்ஜுன் டெண்டுல்கர் திருமணம்: அர்ஜுன் டெண்டுல்கரின் மனைவி சானியா சந்தோக்கின் இளஞ்சிவப்பு மெஹந்தி மற்றும் வெளிர் சூடா தோற்றம் காணப்படாத திருமணப் படங்களில் நிகழ்ச்சியைத் திருடுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே 94 மற்றும் 95 ஆகிய இரண்டு புதிய விண்வெளி நடைகளுக்கான தேதிகளை நாசா நிர்ணயித்துள்ளது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவில் எந்த இடம் ‘லிட்டில் ஈரான்’ என்று அழைக்கப்படுகிறது: சுமார் 1,000 பேர் கொண்ட இந்த சிறிய சமூகத்தின் பின்னணியில் உள்ள ஆச்சரியமான கதை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மகாராஷ்டிராவில் உள்ள இந்த சிறிய கிராமத்தில் பூசணிக்காயில் வளரும் ஒரு மந்திர ரகசியம் உள்ளது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.