Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்துச் சிதறியது – நடந்தது என்ன?
    உலகம்

    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்துச் சிதறியது – நடந்தது என்ன?

    adminBy adminJune 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்துச் சிதறியது – நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெக்சாஸ்: டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் தீ பரிசோதனையின்போது வெடித்துச் சிதறியது.

    ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்களில் இன்று வழக்கமான தீ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது ராக்கெட்டின் அடிப்பகுதியில் இருந்து ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டு, சுற்றியுள்ள பகுதிகள் தீப்பிழம்புகள் மற்றும் புகையால் சூழ்ந்தது. இந்த விபத்தானது ஸ்டார்ஷிப் திட்டத்துக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனால் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது அனைத்து விண்கல தயாரிப்புகளையும் காலவரையின்றி நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    வரும் ஜூன் 29 அன்று ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்ஷிப் விண்கலத்தை இயக்குவதை இலக்காகக் கொண்டிருந்தது. இது உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் அமைப்பின் 10-வது சோதனையாகும்.

    இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு 2025-ம் ஆண்டில் ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்ஷிப் திட்டத்ததுக்கான மூன்றாவது தோல்வியாக மாறியுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், இரண்டு ஸ்டார்ஷிப் சோதனை விண்கலன்கள் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறின. ஒரு விண்கலம் கரீபியனில் விழுந்தது, மற்றொன்று கட்டுப்பாட்டை இழந்து அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து உடைந்தது.

    நிலவுக்குச் செல்லும் பயணங்களுக்கான திட்டங்களுடனும், செவ்வாய் கிரகத்துக்கான பயணத் திட்டங்களுடனும், மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் எலான் மஸ்க்கின் நோக்கத்துக்கான நம்பிக்கையாக ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டார்ஷிப் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

    தற்போதைய பின்னடைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம், ‘மீண்டும் மீண்டும் பின்னடைவுகள் இருந்தபோதிலும், நிறுவனம் விரைவான வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான சோதனைகளுடன் முன்னேறியுள்ளது. நாங்கள் ஒவ்வொரு தோல்வியையும் ஒரு கற்றல் வாய்ப்பாக கருதுகிறோம். இந்த வெடிப்புச் சம்பவம், புதிய விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உள்ளார்ந்த அபாயங்களைக் காட்டினாலும், ஸ்டார்ஷிப்பின் இறுதி வெற்றி விண்வெளிப் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும். பூமிக்கு அப்பால் மனிதர்களையும் சரக்குகளையும் கொண்டு செல்லக்கூடிய விண்கலத்தை உருவாக்குவோம்’ என்று தெரிவித்தது.

    ANOMALY! Just before Ship 36 was set to Static Fire, it blew up at SpaceX Masseys!

    Live on X and YT: pic.twitter.com/CfZhDeSGae


    — NSF – NASASpaceflight.com (@NASASpaceflight) June 19, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    சீனாவின் மெகா அணை திட்டத்தால் இந்தியாவுக்கு ஆபத்தா? – ஒரு தெளிவுப் பார்வை

    July 22, 2025
    உலகம்

    வங்கதேச விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு – அரசு துக்கம் அனுசரிப்பு

    July 22, 2025
    உலகம்

    வங்கதேசத்தில் பள்ளி வளாகத்தில் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு

    July 22, 2025
    உலகம்

    வங்கதேசத்தில் பள்ளி மீது பயிற்சி விமானம் மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் பலி

    July 21, 2025
    உலகம்

    கோல்ட் பிளே ‘கிஸ் கேம்’ தருணத்திலிருந்து வானியலாளரின் கிறிஸ்டின் கபோட் ஒரு உயரடுக்கு ‘பாஸ்டன் பிராமணர்’ குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார் – பாஸ்டன் பிராமணர்கள் யார், அவரது குடும்பம் எவ்வளவு செல்வந்தர்? | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    July 21, 2025
    உலகம்

    20 ஆண்டு கோமாவில் இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் பின் காலித் காலமானார்

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
    • லிப் ஃபில்லர்கள் தவறாகிவிட்டதா அல்லது சாதாரண பக்க விளைவு? நிபுணர் யோர்பி ஜாவேடியின் வீங்கிய உதடுகளை உடைக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு
    • “தீமைக்கு மாற்று தீமை கிடையாது!” – எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை நிராகரித்த சீமான்
    • விட்டிலிகோ தோற்றத்தை விட அதிகமாக பாதிக்கிறது: இது மன மற்றும் சமூக நல்வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பது இங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.