Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, March 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»எச்1பி விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
    உலகம்

    எச்1பி விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

    adminBy adminOctober 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எச்1பி விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வாஷிங்டன்: எச்​1பி விசாவுக்​கான கட்​ட​ணத்தை 1 லட்​சம் டாலராக அதி​கரிப்​ப​தாக அறிவித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் முடிவை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட கூட்டமைப்பு ஒன்று, ட்ரம்ப் அறிவித்துள்ள எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அவர்கள் தங்கள் மனுவில், “எச்​1பி விசாவுக்​கான புதிய விதி​முறை​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த செப்​டம்​பர் 19-ல் வெளி​யிட்​டார். அதில், எச்​1பி விசாவுக்​கான கட்​ட​ணத்தை 1 லட்​சம் டால​ராக அதி​கரிப்​ப​தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்​கெனவே 2,000 டாலர் என்​ப​திலிருந்து 5 ஆயிரம் டால​ராக கட்​ட​ணத்தை அதி​கரித்த ட்ரம்ப், தற்​போது பன்​மடங்கு உயர்த்​தி இருப்பது திறமை​யான வெளி​நாட்டு தொழிலாளர்​களை நம்​பி​யிருக்​கும் அமெரிக்க நிறு​வனங்​களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    எச்​1பி விசா திட்டம், வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை அமெரிக்காவில் பணியமர்த்துவதற்கான ஒரு முக்கிய திட்டம். இது அமெரிக்காவின் புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சிறப்புத் துறைகளில் பணியாளர்களை நிரப்ப இது அனுமதிக்கிறது.

    அரசின் தற்போதைய முடிவால், மருத்துவமனைகள் மருத்துவ ஊழியர்களையும், தேவாலயங்கள், போதகர்களையும், வகுப்பறைகள் ஆசிரியர்களையும், நாடு முழுவதும் உள்ள தொழில்கள் முக்கிய கண்டுபிடிப்பாளர்களையும் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த உத்தரவை தடுத்து, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான முன் கணிப்புத் தன்மையை மீட்டெடுக்குமாறு கோருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.

    எச்1பி விசா திட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. அதிக திறமைகளைக் கொண்ட பணியாளர்களை ஈர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த விசா மூலம் அமெரிக்காவில் இருப்போரில் மூன்றில் ஒரு பங்கு பேர், செவிலியர்களாகவும், ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பாதிரியார்களாகவும், போதகர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பாதிக்கப்பட்டவரின் உடலை சுட்டு வீசிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு கால்களையும் இழந்த சார்பு தடகள வீரர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 27, 2026
    உலகம்

    $10,000 பில் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக, கூரை வேலை முடிவதற்குள், பெண் தொழிலாளர்கள் மீது ICE ஐப் பயன்படுத்துகிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 27, 2026
    உலகம்

    ‘விரைவில் தொடங்குதல்’ என்றால் என்ன? அமெரிக்க-ஈரான் போருக்கு இடையே வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ பக்கம் விசித்திரமான, விவரிக்கப்படாத வீடியோக்களை வெளியிடுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 26, 2026
    உலகம்

    US, UK, EU வரலாற்று அநீதியை ஒப்புக்கொண்ட போதிலும், ஐ.நா. உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 26, 2026
    உலகம்

    60 மணிநேர சமூக சேவை மற்றும் சிகிச்சை செலவுக்காக $12,000: AI-உருவாக்கிய போலி படங்களை உருவாக்கிய பதின்ம வயது சிறுவர்களுக்கு தண்டனை | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 26, 2026
    உலகம்

    அமெரிக்கா சமூக ஊடக சோதனையை மேலும் விசா வகைகளுக்கு விரிவுபடுத்துகிறது; இந்த நடவடிக்கை இந்தியர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வீட்டில் முருங்கை (சஹ்ஜன்) வளர்ப்பது எப்படி: ஒரு எளிய படிப்படியான வழிகாட்டி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாதிக்கப்பட்டவரின் உடலை சுட்டு வீசிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு கால்களையும் இழந்த சார்பு தடகள வீரர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 5 வேலை பழக்கங்கள் உங்கள் நற்பெயரை ரகசியமாக கெடுக்கின்றன – மேலும் அவற்றை எவ்வாறு விரைவாக சரிசெய்வது
    • நீல கிரகமான பூமியைப் பற்றிய 10 மனதைக் கவரும் உண்மைகள்
    • உலகின் மிக விலையுயர்ந்த தேன்: ஒரு கிலோ ரூ. 9 லட்சம் மதிப்புள்ள Türkiye இன் தொலைதூர உயரமான ஆழத்தில் இருந்து சென்டாரி தேன் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.