Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, March 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»உக்ரைன் மீது உக்கிரம் காட்டும் ரஷ்யா: ஒரே இரவில் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல்!
    உலகம்

    உக்ரைன் மீது உக்கிரம் காட்டும் ரஷ்யா: ஒரே இரவில் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல்!

    adminBy adminJune 10, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உக்ரைன் மீது உக்கிரம் காட்டும் ரஷ்யா: ஒரே இரவில் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கீவ்: மூன்று ஆண்டுகளாக தொடரும் போரில் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலாக, உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது என உக்ரைன் விமானப்படை கூறியது.

    உக்ரைன் மீது நேற்று இரவு 479 ட்ரோன்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் வரை 20 ஏவுகணைகள் பல்வேறு பகுதிகளில் ஏவப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா முக்கியமாக மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை குறிவைத்து தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

    உக்ரைனின் விமானப்படை தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் 277 ட்ரோன்கள் மற்றும் 19 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகவும், 10 ட்ரோன்கள், ஏவுகணைகள் மட்டுமே தங்கள் இலக்குகளைத் தாக்கியதாகவும் கூறியது. இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களில் இருந்து, இப்போது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்துவதில் இன்னும் முன்னேற்றம் காணாத நிலையில், ரஷ்யாவும் உக்ரைனும் நேற்று தங்களின் போர்க் கைதிகளை மாற்றிக்கொண்டன. திங்களன்று அதிகமான கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக ஜெலென்ஸ்கியும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்தன, இருப்பினும் இரு தரப்பினரும் எத்தனை பேர் என்று கூறவில்லை. வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் ஒரு மருத்துவமனைக்கு வெளியே மக்கள் கூடி, தங்கள் உறவினர்கள் விடுவிக்கப்பட்டவர்களில் இருக்கிறார்களா என்று பார்த்தனர்.

    உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து 200க்கும் மேற்பட்ட உக்ரைன் போர்க் கைதிகள் சிறையில் இறந்துள்ளனர் என்று கடந்த மாதம் வெளியிடப்பட்ட அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை கண்டறிந்துள்ளது.

    உக்ரைன், ரஷ்யாவுடன் தொடர்ந்து மோத மேற்கத்திய நாடுகளின் உதவியை எதிர்பார்த்துள்ளது. குறிப்பாக வான் பாதுகாப்புத் துறைகளிடமிருந்து உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் போர் குறித்த அமெரிக்காவின் சமீபத்திய நிலைப்பாடு காரணமாக உக்ரைனுக்கு உதவிகள் கிடைக்குமா எனத் தெரியவில்லை. இருப்பினும், ரஷ்யா மீது உக்ரைன் சில அதிர்ச்சியூட்டும் எதிர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    ரஷ்யாவின் கோபத்துக்கான பின்புலம் என்ன? – ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க உட்பட பல நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால், இது பலனளிக்கவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் 5 விமானப்படை தளங்களை குறிவைத்து, உக்ரைன் கடந்த 1-ம் தேதி ‘ஆபரேஷன் சிலந்தி வலை’ என்ற பெயரில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் தொலை தூர பகுதிக்குள் லாரிகள் மூலம் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் கொண்டு செல்லப்பட்டு ரஷ்யாவின் குண்டு வீச்சு விமானங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 41 விமானங்கள் முற்றிலும் சேதமடைந்தன. உக்ரைனின் இந்த தாக்குதல் ரஷ்யாவை அதிர்ச்சியடைச் செய்தது.

    இந்த தாக்குதலுக்காக உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசிய ரஷ்ய அதிபர் புதின் கூறினார். அதன்படியே உக்ரைனின் கீவ், லிவிவ் மற்றும் சுமி உட்பட 9 முக்கிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா ஜூன் 6 மற்றும் 7ம் தேதிகளில் இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. உக்ரைன் மீது 400 ட்ரோன்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

    ரஷ்யா நடத்திய தாக்குதலில், உக்ரைன் தலைநகரமான கீவ் நகரில் தீயணைப்பு வீரர்கள் 3 பேரும், லட்ஸ்க் நகரில் பொதுமக்கள் 2 பேரும், செரினிஹிவ் பகுதியில் ஒருவரும் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உக்ரைன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய கட்டிடங்கள் சேதமடைந்தன. ‘‘உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் நகரிலிருந்து, தென்கிழக்கு பகுதியில் உள்ள சுமி வரை 9 பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர்’’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ரஷ்ய ராணுவ அமைச்சகம் கூறுகையில், ‘‘ உக்ரைன் நடத்திய தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’’ என்றது. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து,மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. மேலும் நெப்டியூன் ரக ஏவுகணைகளையும் வீசியது. இதில் 174 ட்ரோன்கள், 3 ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து ரஷ்யா அழித்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பென்சில்வேனியாவில் ஹெச்-1பி விசா மோசடி, ஹெல்த்கேர் ஊழல் போன்றவற்றில் தண்டனை பெற்ற காஷ் படேலைச் சந்தித்ததைப் பற்றி தற்பெருமை காட்டிய இந்திய வம்சாவளி சகோதரர்கள்; 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    இங்கிலாந்தின் வெம்ப்லியில் உள்ள இந்திய கடைகள், உணவகங்கள் இலக்கு தாக்குதல்களில் நாசமாக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    அன்னா லீ வாட்டர்ஸ் யார்? 19 வயதான பிக்கிள்பால் நட்சத்திரம் அடுத்த மாதம் சர்வதேச அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ‘இந்து விரோதிகளை புண்படுத்த வேண்டாம்’: இந்திய வம்சாவளி பிராண்ட் லட்சுமி சிலையை பேக்கேஜிங்கில் இருந்து அகற்றியது, ஆன்லைனில் பெரும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ஜார்ஜியா பள்ளி சண்டை கொடியதாக மாறியது: மற்றொரு மாணவனுடன் சண்டையிட்டு 12 வயது சிறுமி மரணம்; வீடியோவைப் பார்க்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    கண்ணீர், நிவாரணம் மற்றும் மீண்டும் இணைதல்: மரியாச்சி விளையாடும் டெக்சாஸ் சகோதரர்கள் ICE காவலில் பல வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு குடும்பங்களை இண்டக்ஷன் குக்டாப்களுக்கு மாற்றுகிறது: தெரிந்துகொள்ள வேண்டிய 5 தொடக்கக் குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இடியுடன் கூடிய மழையின் போது மின்சாரத்தில் ஒளிரும் மரங்களை விஞ்ஞானிகள் கைப்பற்றினர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானங்கள் புதுப்பிப்பு, மார்ச் 12: எமிரேட்ஸ், எதிஹாட், ஃப்ளைடுபாய், ஏர் அரேபியா மறுபதிவு விருப்பங்களுடன் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மீண்டும் தொடங்குகின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அண்டார்டிகாவில் உள்ள அன்டர்சீ ஏரியை நாசா கண்டுபிடித்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆன்மீக எளிமைக்காக தானும் விராட் கோலியும் ‘பவர் கப்பிள்’ லேபிளை ஏன் நிராகரிக்கிறோம் என்பதை அனுஷ்கா ஷர்மா வெளிப்படுத்துகிறார் – “நாங்கள் ஒருவருக்கொருவர் ஆண் மற்றும் பெண் பதிப்புகள்” | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.