Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, March 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»ஈரான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 3 மூத்த தளபதிகள் உயிரிழப்பு
    உலகம்

    ஈரான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 3 மூத்த தளபதிகள் உயிரிழப்பு

    adminBy adminJune 22, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஈரான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 3 மூத்த தளபதிகள் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல், ஈரான் இடையே நேற்று 9-வது நாளாக போர் நீடித்தது. ஆரம்பம் முதலே ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்படி நேற்று ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தின. இதில் அந்த அணு சக்தி தளம் மிகக் கடுமையாக சேதமடைந்தது.

    3 தளபதிகள் உயிரிழப்பு: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின. இதில் ஈரான் ராணுவத்தின் ஐஆர்ஜிசி படை பிரிவின் மூத்த தளபதி பேனம் ஷாரியாரி கொல்லப்பட்டார். லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுத்தி, காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இவரே ஆயுதங்களை விநியோகம் செய்து வந்தார்.

    ஈரானின் கும் நகரில் உள்ள ராணுவ முகாம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் ஈரான் ராணுவத்தின் குத்ஸ் படைப் பிரிவின் தலைவர் சயீது இஷாதி உயிரிழந்தார். இவர் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கும் பணியை மேற்கொண்டு வந்ததாக இஸ்ரேல் அரசு குற்றம் சாட்டி உள்ளது. இஸ்ரேல் விமான படை தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் ட்ரோன் பிரிவு மூத்த தளபதி அமின் போர் ஜோத்கி உயிரிழந்தார்.

    கடந்த 13-ம் தேதி முதல் இதுவரை ஈரான் முழுவதும் 657 பேர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

    இஸ்ரேல் நகரங்கள் வெறிச்சோடின: இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் கொத்து குண்டுகளையும் ஈரான் ராணுவம் வீசி வருகிறது.

    ஒரு கொத்து குண்டில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குண்டுகள் இருக்கும். இவை சுமார் 8 கி.மீ. சுற்றளவு வரை வெடித்துச் சிதறி பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. சில குண்டுகள் பூமியில் புதைந்துவிடும். அவை சில மாதங்கள், சில ஆண்டுகள் கழித்துகூட வெடித்துச் சிதறும். கொத்து குண்டில் விஷ வாயுக்களை நிரப்பினால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இதனால் இஸ்ரேல் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழையும்போது அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நகரங்களை சேரந்த இஸ்ரேல் மக்களின் செல்போன்களுக்கு அபாய எச்சரிக்கை தகவலும் அனுப்பப்படுகிறது.

    அபாய ஒலி, எச்சரிக்கை தகவலை பார்த்தவுடன் இஸ்ரேல் மக்கள் வீடுகள், பொது இடங்களில் உள்ள பதுங்கு அறைகளில் தஞ்சமடைந்து விடுகின்றனர். இதனால் இஸ்ரேலில் உயிரிழப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    ஈரான் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் டெல் அவிவ் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடந்த ஒரு வாரவாக இஸ்ரேல் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் செயல்படவில்லை.

    இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ திறன் 90%-ல் இருந்து 65% ஆக குறைந்தது: இஸ்ரேல் ராணுவம் சார்பில் ‘அயர்ன் டோம்’ என்ற வான் பாதுகாப்பு கவசம் நிறுவப்பட்டு உள்ளது. சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள எதிரிகளின் ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன்களை, ‘அயர்ன் டோம்’ ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழித்துவிடும்.

    அயர்ன் டோமின் செயல்திறன் 90 சதவீதம் துல்லியமானது என்று இஸ்ரேல் ராணுவம் கூறிவந்தது. ஆனால் அதன் செயல்திறன் 60 முதல் 65 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 9 நாட்களில் ஈரான் ராணுவம், இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியிருக்கிறது. இதில் 60 சதவீத ஏவுகணைகளை மட்டுமே ‘அயர்ன் டோம்’ இடைமறித்து அழித்திருக்கிறது. 40 சதவீத ஏவுகணைகள் இஸ்ரேல் நகரங்கள் மீது விழுந்துள்ளன. இதன்காரணமாகவே இஸ்ரேல் நகரங்களில் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது.

    3 வாரிசுகளை தேர்ந்தெடுத்த ஈரான் மத தலைவர் கொமேனி: இஸ்ரேல் விமானப் படையின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி (86), டெஹ்ரானில் உள்ள பதுங்கு அறையில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். அவரை பாதுகாக்க ஈரான் ராணுவத்தினர் அடிக்கடி இடம் மாற்றி வருகின்றனர். எனினும், அவரை அழிக்கும்வரை ஓய மாட்டோம் என்று இஸ்ரேல் ராணுவம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த சூழலில் அயத்துல்லா அலி கொமேனி, 3 வாரிசுகளை தேர்ந்தெடுத்து உள்ளார். தனது மறைவுக்குப் பிறகு 3 பேரில் ஒருவரை ஈரான் மதத் தலைவராக நியமிக்கும்படி அவர் அறிவுறுத்தி உள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பென்சில்வேனியாவில் ஹெச்-1பி விசா மோசடி, ஹெல்த்கேர் ஊழல் போன்றவற்றில் தண்டனை பெற்ற காஷ் படேலைச் சந்தித்ததைப் பற்றி தற்பெருமை காட்டிய இந்திய வம்சாவளி சகோதரர்கள்; 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    இங்கிலாந்தின் வெம்ப்லியில் உள்ள இந்திய கடைகள், உணவகங்கள் இலக்கு தாக்குதல்களில் நாசமாக்கப்பட்டன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    அன்னா லீ வாட்டர்ஸ் யார்? 19 வயதான பிக்கிள்பால் நட்சத்திரம் அடுத்த மாதம் சர்வதேச அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ‘இந்து விரோதிகளை புண்படுத்த வேண்டாம்’: இந்திய வம்சாவளி பிராண்ட் லட்சுமி சிலையை பேக்கேஜிங்கில் இருந்து அகற்றியது, ஆன்லைனில் பெரும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 11, 2026
    உலகம்

    ஜார்ஜியா பள்ளி சண்டை கொடியதாக மாறியது: மற்றொரு மாணவனுடன் சண்டையிட்டு 12 வயது சிறுமி மரணம்; வீடியோவைப் பார்க்கவும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    உலகம்

    கண்ணீர், நிவாரணம் மற்றும் மீண்டும் இணைதல்: மரியாச்சி விளையாடும் டெக்சாஸ் சகோதரர்கள் ICE காவலில் பல வாரங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹர்திக்-க்ருனால் பாண்டியா முதல் ஷான்-மிட்செல் மார்ஷ் வரை: பிரபல கிரிக்கெட் வீரர்களான 10 உடன்பிறப்புகள்
    • வெப்பமயமாதல் காலநிலை காரணமாக கிங் பெங்குவின் இனப்பெருக்கம் வெற்றி விகிதத்தை உயர்த்துகிறது, ஆய்வு முடிவுகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு குடும்பங்களை இண்டக்ஷன் குக்டாப்களுக்கு மாற்றுகிறது: தெரிந்துகொள்ள வேண்டிய 5 தொடக்கக் குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இடியுடன் கூடிய மழையின் போது மின்சாரத்தில் ஒளிரும் மரங்களை விஞ்ஞானிகள் கைப்பற்றினர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானங்கள் புதுப்பிப்பு, மார்ச் 12: எமிரேட்ஸ், எதிஹாட், ஃப்ளைடுபாய், ஏர் அரேபியா மறுபதிவு விருப்பங்களுடன் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மீண்டும் தொடங்குகின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.