Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, March 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
    உலகம்

    இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

    adminBy adminMay 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    டெல் அவிவ்: இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் தரப்பும் உறுதி செய்துள்ளது. தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையமான பென் குரியன் மீது நடந்த தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஹவுதியின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரீ, “பென் குரியன் விமான நிலையம் இனி விமான போக்குவரத்துக்கு பாதுகாப்பானது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

    இந்தத் தாக்குதல் காரணமாக மத்திய இஸ்ரேலில் உள்ள விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சில விமானங்கள் திருப்பி விடப்பட்டன. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் சிறிது நேரத்துக்கு மூடப்பட்டன.

    தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறுகையில், “யார் எங்களைத் தாக்கியிருந்தாலும், அவர்கள் ஏழு மடங்குக்கு திருப்பித் தாக்கப்படுவார்கள்.” என்று எச்சரிக்கை விடுத்தார்.

    திசைதிருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்: இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் டெல்லியில் இருந்து டெல் அவிவ் சென்ற ஏர் இந்தியா விமானம் அபுதாபிக்கு திசை திருப்பிவிடப்பட்டது. ஏர் இந்தியா விமானம் டெல் அவிவ்-க்கு செல்வதற்கு ஒருமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

    இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “டெல்லியில் இருந்து டெல் அவிவ்-க்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ139 பென் குரியன் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் காரணமாக அபுதாபிக்குத் திருப்பி விடப்பட்டது. விமானம் அபுதாபியில் இயல்பாக தரையிறங்கியது. பின்பு சிறிது நேரத்தில் டெல்லி திரும்பியது.

    தாக்குதலின் விளைவாக, மே 6ம் தேதி டெல்லியில் இருந்து டெல் அவிவ்-க்கும், அங்கிருந்து டெல்லிக்கும் வரும் அனைத்து ஏர் இந்தியா விமான சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் மற்றும் விமானப் பணியாளர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் குறித்து எங்களின் பணியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறார்கள்.” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    ஷில்பா சவுத்ரி: இந்திய வம்சாவளி அமெரிக்க ராணுவ வீரர் ஷில்பா சவுத்ரி விவாதத்தை கிளப்புகிறார்: ‘ஈரான் தலைவருக்காக இந்தியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?’ | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஹோலி கொண்டாட்டம் ஹாரோ: யுகே: ஹாரோவில் நடந்த ஹோலி நிகழ்வில் சண்டை மூண்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 7, 2026
    உலகம்

    ஹாலிவுட் & அனிமேஷன் மூலம் ஈரான் தாக்குதல்களை வெள்ளை மாளிகை மகிமைப்படுத்துகிறது: ‘ஜஸ்டிஸ் தி அமெரிக்கன் வே’ சீற்றத்தைத் தூண்டுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 6, 2026
    உலகம்

    ‘நாங்கள் சுடப்பட்டபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?’: கண்ணை இழந்த ஈரானிய ஆர்வலர் கமலா ஹாரிஸை அமெரிக்கத் தாக்குதல்களை எதிர்த்ததற்காக அவதூறாகப் பேசுகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 6, 2026
    உலகம்

    ‘நான் பாதுகாப்பாக உணரவில்லை’: கனடாவில் குத்திக் கொல்லப்பட்ட செல்வாக்குமிக்க நான்சி கிரேவாலின் பழைய வீடியோ வைரலாகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 6, 2026
    உலகம்

    ஈரானுடன் அமெரிக்கா-இஸ்ரேல் போர்: பல்வேறு வளைகுடா நாடுகள் இங்கிலாந்து மற்றும் கெய்ர் ஸ்டார்மர் மீது ஏன் கோபமாக உள்ளன | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    March 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஷில்பா சவுத்ரி: இந்திய வம்சாவளி அமெரிக்க ராணுவ வீரர் ஷில்பா சவுத்ரி விவாதத்தை கிளப்புகிறார்: ‘ஈரான் தலைவருக்காக இந்தியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?’ | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹோலி கொண்டாட்டம் ஹாரோ: யுகே: ஹாரோவில் நடந்த ஹோலி நிகழ்வில் சண்டை மூண்டது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாம் பூமியில் இருந்தால் மனித இனம் வாழாது என்று ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை எச்சரித்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹாலிவுட் & அனிமேஷன் மூலம் ஈரான் தாக்குதல்களை வெள்ளை மாளிகை மகிமைப்படுத்துகிறது: ‘ஜஸ்டிஸ் தி அமெரிக்கன் வே’ சீற்றத்தைத் தூண்டுகிறது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவில் ₹10,000க்குள் பார்க்க மார்ச்-சரியான இடங்கள்; பயணத்திட்டத்தை சரிபார்க்கவும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.