Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இஸ்ரேலின் டெல் அவிவில் ‘மொசாட்’ மையத்தை தாக்கியதாக ஈரான் தகவல்
    உலகம்

    இஸ்ரேலின் டெல் அவிவில் ‘மொசாட்’ மையத்தை தாக்கியதாக ஈரான் தகவல்

    adminBy adminJune 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இஸ்ரேலின் டெல் அவிவில் ‘மொசாட்’ மையத்தை தாக்கியதாக ஈரான் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தெஹ்ரான்: டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் (Mossad) மையத்தைத் தாக்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் ஈரான் இடையே 5-வது நாளாக அதிகரித்து வரும் வான்வழிப் போருக்கு மத்தியில், இன்று டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் மையத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதுகுறித்த அறிக்கையில், “இஸ்ரேலின் சியோனிச ஆட்சி ராணுவத்தின் ராணுவ புலனாய்வு மையமான அமானையும், டெல் அவிவில் உள்ள சியோனிச ஆட்சியின் பயங்கரவாத நடவடிக்கை திட்டமிடல் மையமான மொசாட்டையும் தாக்கினோம். அது தற்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது” என்று கூறியது.

    இன்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது பலத்த குண்டுமழை சத்தம் கேட்டதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இதனால் இஸ்ரேலின் பல பகுதிகளில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்தன. மேலும், ஈரானிய ஏவுகணைகள் வருவது குறித்து இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.

    “சிறிது நேரத்துக்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன. ஏவுகணை அச்சுறுத்தலை அகற்ற, தேவையான இடங்களில் அவற்றை இடைமறித்து தாக்குவதற்கு செயல்பட்டு வருகிறோம்” என்று ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பல பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட இடங்களை விட்டு வெளியேற மக்கள் அனுமதிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. ஏவுகணைகள் விழுந்த இடங்களில் தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் ராணுவம் கூறியது.

    மேற்கு ஈரானை தாக்கும் இஸ்ரேல்: இதனிடையே, மேற்கு ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது செவ்வாய்க்கிழமை இரவு “பல விரிவான தாக்குதல்களை” நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இஸ்ரேல் ராணுவத்தின் அறிக்கையில், “இந்த தாக்குதல்களின் போது, ​​ஈரானில் உள்ள டஜன் கணக்கான ஏவுகணை சேமிப்பு மற்றும் ஏவுதல் உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டன. மேலும், மேற்கு ஈரானில் தரையிலிருந்து வான் நோக்கி தாக்கும் ஏவுகணைகள் மற்றும் யுஏவி சேமிப்பு தளங்கள் தாக்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளது.

    TWO CONFIRMED HITS BY IRAN:

    – The AMAN logistics centre of the Israeli army intelligence in Sharon

    – MOSSAD HQ in Herzliya pic.twitter.com/gd36EzrN08


    — Iran Military (@IranMilitary__) June 17, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

    June 30, 2025
    உலகம்

    வசிரிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலுக்கு வழக்கம் போல் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறது பாகிஸ்தான்

    June 30, 2025
    உலகம்

    477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் – உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!

    June 29, 2025
    உலகம்

    இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: மீண்டும் வலியுறுத்தும் ட்ரம்ப்

    June 29, 2025
    உலகம்

    இந்தியப் பெண் அமெரிக்காவில் காணாமல் போயிருக்கிறாள்: ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு சென்றுவிட்டாள்; தேடல் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    June 29, 2025
    உலகம்

    ‘பெரிய தவறு’: ‘பெரிய அழகான’ வரி மசோதாவை நிராகரித்ததற்காக டிரம்ப் செனட்டர் டில்லிஸைப் பின் தொடர்கிறார் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்தது
    • மாரடைப்பு அறிகுறிகள்: ஒரு மாதத்திற்கு முன்பு தோன்றக்கூடிய மாரடைப்பின் 5 எச்சரிக்கை அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • Calalhoyuk: பெண்களால் ஆளப்படும் 9,000 ஆண்டுகள் பழமையான நகரம், டி.என்.ஏ திருமண நாகரிகத்தின் கதையை வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ​விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்டி இன்று தொடக்​கம்!
    • கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.